மின்னல் வேக பைக் ரைட்.. செல்போனை திருடிய காதலன்.. பின்னாலிருந்து ஊக்கம் தந்த காதலி.. ஷாக்!
செல்போன் பறித்த கல்லூரி மாணவி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்
சென்னை: பைக்கில் சென்றபோது செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரையும் சிசிடிவி காட்சியில் பார்த்ததும் சென்னை போலீசாரே ஆடிப்போய் விட்டனர். பைக் ஓட்டியது காதலன் என்றால், பின்னாடி உட்கார்ந்து செல்போனை பறித்தது காதலி என்பதுதான் ஷாக்!
சென்னை நுங்கம்பாக்கத்தில் பியூட்டி பார்லர் வைத்துள்ளார் பிரசன்னா லிப்சா. இவர் கடந்த திங்கள்கிழமை, ஜி.என்.செட்டி சாலை ஓரமாக தோழியுடன் நடந்து சென்றார்.
லிப்சா கையில் செல்போன் இருந்தது. அப்போது திடீரென பைக்கில் 2 பேர் வேகமாக வந்தனர். அவர்கள் யார் என்று தெளிவாக தெரியவில்லை. பிறகு லிப்சாவின் செல்போனை அலேக்காக பறித்து கொண்டு பைக்கில் பறந்து விட்டனர்.

தனிப்படை
செல்போனை பறித்து சென்றதை லிப்சா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர், தேனாம்பேட்டை ஸ்டேஷனில் புகார் அளிக்கவும், உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை ஆரம்பமானது.

காதலர்கள்
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சியை பார்த்ததுமே ஷாக் ஆகிவிட்டனர் போலீசார். கொள்ளையன் பின்னாடி உட்கார்ந்திருந்தது ஒரு பெண் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பைக்கின் நம்பரை வைத்து சம்பந்தப்பட்டவர்களையும் கண்டுபிடித்தனர். அவர்களது பெயர் ராஜூ, சுவாதி என்பதும் இருவரும் காதலர்கள் என்பதும் தெரியவந்தது.

கஞ்சா
சுவாதி, தாம்பரத்தில் உள்ள காலேஜில் விசுவல் கம்யூனிகேசன் படிக்கிறாராம். ராஜு டாட்டூ வரையும் நபராம். உடலில் டாட்டூ போட வரும்போது, ராஜுவுடன் சுவாதிக்கு லவ் ஆகி உள்ளது. இருவரும் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களாம். கஞ்சா வாங்க இருவரும் நிறைய இடங்களுக்கு ஜோடியாகவே செல்வார்களாம். இவர்கள் வந்த பைக்கும் திருட்டு பைக்காம்.

போதை
வரும் வழியில் கிண்டியில் ஒரு செல்போனை பறித்துவிட்டுதான், லிப்சாவின் செல்போனையும் பறித்துள்ளனர். 2 செல்போனையும் பர்மா பஜாரில் விற்று போதை பொருளையும் அதற்குள் வாங்கிவிட்டனர். இறுதியில் 2செல்போன், திருட்டு பைக் பறிமுதல் செய்யப்பட்டு, காதல் ஜோடியை புழலில் அடைத்தனர் போலீசார்!
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
எய்ட்ஸ் பெண் டீ குடிக்க கூப்பிட்டாராம்.. உடனே கிளம்பிய முதியவர்.. லேப்டாப்பை திறந்த போலீசுக்கு ஷாக் -
தோசைக்கல்லை எடுத்து வந்த மனைவி.. அடுத்த நொடியே வாயடைத்து போன வடமதுரை.. திடுக் திண்டுக்கல் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications