தமிழ்நாடு +2 ரிசல்ட்.. வெளியானது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. எப்படி பார்ப்பது?
சென்னை: தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்திற்கான பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. 7 லட்சத்து 92 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதிய தேர்விற்கு இன்று ரிசல்ட் வெளியாகி உள்ளது.
பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மூன்றாம் தேதி முதல் தமிழக பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகளே இன்று வெளியானது.

எப்படி +2 ரிசல்ட் பார்ப்பது
2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்க்க விரும்பும் மாணவர்கள், தங்கள் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்ய அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மற்றும் பல மாற்று முறைகளைப் பயன்படுத்தலாம். தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் பார்த்து பதிவிறக்கம் செய்யக்கூடிய அனைத்து தளங்களுக்கும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.
dge.tn.gov.in
tnresults.nic.in
apply1.tndge.org/dge-result-list
tn gov 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: எப்படி உள்நுழைவது
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் TN 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்க்க, மாணவர்கள் சில முக்கியமான உள்நுழைவு விவரங்களை உள்ளிட வேண்டும். இந்த விவரங்கள் அவர்களின் அட்மிட் கார்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ரோல் எண்
பிறந்த தேதி
TNDGE HSC பிளஸ் டூ தேர்வு முடிவுகளை பார்ப்பதற்கான வழிமுறைகள்:
மாணவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து TN 12வது தேர்வு முடிவுகளை எளிதாக சரிபார்த்து பதிவிறக்கம் செய்வது எப்படி என்று இங்கே விளக்கப்பட்டு உள்ளது.
படி 1: அதிகாரப்பூர்வ TN அரசின் ரிசல்ட் வலைத்தளங்களுக்குச் செல்லவும் - tnresults.nic.in அல்லது dge.tn.gov.in
படி 2: "TN 12வது தேர்வு முடிவுகள் 2025" என்று கூறும் இணைப்பைக் கிளிக் செய்யவும்
படி 3: கொடுக்கப்பட்ட பக்கத்தில் உங்கள் பதிவு எண்ணை உள்ளிடவும், உங்கள் பிறந்த தேதியை பின்னர் குறிப்பிடவும்.
படி 4: உங்கள் TN 12வது தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்
படி 5: உங்கள் மதிப்பெண் முடிவை பதிவிறக்கி கொள்ளலாம்.
விடைத்தாள் திருத்தும் பணி
இந்த ஆண்டு தேர்வு மார்ச் 25ஆம் தேதி முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் நடந்தது.இதற்காக அமைக்கப்பட்டிருந்த 80க்கும் மேற்பட்ட விடைத்தாள் திருத்தும் மையங்களில் நடைபெற்றது. ஏப். 4 தொடங்கி 15-ஆம் தேதி வரை பணிகள் நடந்தது.
ஏப்ரல் 4ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கிய நிலையில் 15ஆம் தேதி.. அதாவது திட்டமிட்டதற்கு முன்கூட்டியே விடைத்திருத்தும் பணிகள் நிறைவடைந்தது. இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதி வெளியாகும் என்றுதான் முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்பே நிறைவு பெற்றதால்.. 1 நாள் முன்கூட்டியே ரிசல்ட் வருகிறது.
தேர்ச்சி விகிதம்
தேர்வு எழுதியவர்கள் 7.92 லட்சம் பேர்
இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 7.53 லட்சம் பேர்
மாணவியர்கள் 4.54 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் .
மாணவர்கள் 3.57 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
மாணவர்களை விட 3.54 சதவிகிதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் 98.82 சதவிகிதம் பெற்று முதலிடம்
ஈரோடு மாவட்டம் 97.98 சதவிகிதம் பெற்று இரண்டாம் இடம்
திருப்பூர் மாவட்டம் 97.53 சதவிகிதம் பெற்று மூன்றாம் இடம்
கோவை மாவட்டம் 97.48 சதவிகிதம் பெற்று நான்காம் இடம்
குமரி மாவட்டம் 97.01 சதவிகிதம் பெற்று ஐந்தாம் இடம்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 26,887 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் சென்டம் எடுத்துள்ளனர்
கணினி அறிவியல் பாடத்தில் 9,536 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்
வேதியியல் பாடத்தில் 3,181 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்
கணித பாடத்தில் 3,022 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications