மாவட்டத்திற்கு 2 விளையாட்டுப் பள்ளிகள்! ஆசிரியர் பணியிடங்கள்! அன்பில் மகேஷின் அசத்தல் அறிவிப்புகள்!
சென்னை: மாவட்டத்திற்கு 2 விளையாட்டுப் பள்ளிகள் உட்பட இன்னும் ஏராளமான புது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
அன்பில் மகேஷ் புதிய அறிவிப்புகளை வாசித்த போது உதயநிதி ஸ்டாலின் மிகவும் ஆர்வமாக அதைக் கவனித்து கேட்டுக் கொண்டிருந்தார்.
பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்ற நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு;

புது அறிவிப்புகள்
2996 அரசு நடுநிலைப்பள்ளிகள் மற்றும் 540 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் சுமார் ரூ.175 கோடி மதிப்பீட்டில் உயர்தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்படும்.

விளையாட்டுப் பள்ளிகள்
மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க மாபெரும் வாசிப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். அதேபோல் அரசுப்பள்ளி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக விளையாட்டுப் பயிற்சிகளுக்கான வசதி எளிதாக கிடைக்கச் செய்யும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 விளையாட்டு சிறப்புப் பள்ளிகள் அமைக்கப்படும்.

தமிழ் மொழி கற்போம்
வேலை காரணமாக தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்து வரும் பிற மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் தங்களின் தாய் மொழியுடன் தங்கு தடையின்றி தமிழில் பேசவும், எழுதவும் ஏதுவாக ''தமிழ் மொழி கற்போம்'' என்ற திட்டம் தொடங்கப்படும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டுவிழா மடத்த 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத் திறன் பயிற்சி தரப்படும்.

பட்டதாரி ஆசிரியர்கள்
அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும். எண்ணும் எழுத்து திட்டத்தை இன்னும் சிறப்பாக செயல்படுத்திட ரூ.8 கோடி மதிப்பில் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்படும். மேல்நிலைப் பள்ளிகளில் புதிய பாடப்பிரிவுகள் உருவாக்கப்படும். அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும்.

விழிப்புணர்வு பயிற்சி
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இணையப் பாதுகாப்பு, வெறுப்பை வளர்க்கும் செய்திகள், மற்றும் தவறான தகவல்களை கண்டறிவது குறித்த விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படும். சிறைச்சாலைகளில் உள்ள முற்றிலும் எழுதப்படிக்காத 1249 கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்படும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications