தவெக 2 எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை இல்லையா? விஜய்யை விளாசிய திமுக துரை சந்திரசேகர்
சென்னை: பெண் மாவட்ட ஆட்சியரிடம் அத்துமீறியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மற்றும் குடிநீர் பிரச்சனை தொடர்பாகப் புகார் அளிக்க வந்த நபரைத் தாக்கியதாகக் கூறப்படும் துணை சபாநாயகர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் தவெக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரன் விமர்சித்துள்ளார்.
தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதமாகிறது.. பல்வேறு விமர்சனங்கள், சர்ச்சைகள், அதிரடி அறிவிப்புகளுக்கு நடுவில், தவெக ஆட்சியை நடத்தி வருகிறது. இந்நிலையில்,. எம்எல்ஏக்கள் சிலர் மீது அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடித்துள்ளன.
முக்கியமாக, பெண் கலெக்டரிடம் அத்துமீறிய கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மற்றும் குடிநீர் பிரச்சனை தொடர்பாக புகார் கொடுக்க வந்த நபரை சரமாரியாக தாக்கிய துணை சபாநாயகர் ஆகிய 2 எம்எல்ஏ-க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

மாமல்லபுரம் கூட்டம்
இதையடுத்து, முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக எம்.எல்.ஏ-க்களின் ஆலோசனைக் கூட்டம் தற்போது நடந்து வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் இன்று காலை இந்த கூட்டம் நடந்து வருகிறது..
கடந்த சில நாட்களாகத் தவெக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீது எழுந்துள்ள புகார்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சி தலைவர் என்ற முறையில் விஜய் அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது..
அட்வைஸ் தருவாரா விஜய்
அதேபோல முக்கிய அறிவுரைகளையும் எம்எல்ஏக்களுக்கு வழங்குவார் என்று தெரிகிறது. குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் மற்றும் மக்கள் பணிகளில் எத்தகைய கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றெல்ம் ஆலோசனைகளையும் வழங்க போவதாக தெரிகிறது. அந்த வகையில் ஈசிஆர் ரிசார்ட் கூட்டம் மிகுந்த கவனம் பெற்று வருகிறது.
இந்நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், தற்போது குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் 2 தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப் போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஜய் என்ன சொல்வார்?
அதில், "முதல்வர் விஜய் அவர்களே பெரும்பான்மையின்றி 110-க்கும் குறைவான தவெக எம்எல்ஏ-க்களை வைத்து கொண்டு ஆட்சி நடத்துகிறார். இரண்டு பேரை வெளியே செல்லுங்கள் என்றா கூறுவார்? தமிழ்நாட்டின் தலையெழுத்து இது தான்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரின் கணவர், குறிப்பிட்ட எம்எல்ஏ மீது புகார் கொடுத்திருக்கிறார். எனினும், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், திமுக எம்.எல்.ஏ-க்கள் சேகர் பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்கு போடுகிறார்கள். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லாமல் வேறு என்ன?" என்றெல்லாம் துரை சந்திரசேகரன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.



Click it and Unblock the Notifications
