• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"டிக்" அடித்த ஸ்டாலின்.. யார் அந்த "தலைகள்".. முதல்வர் காதுக்கு போன சீக்ரெட்.. ஹாட் அடிக்கும் திமுக

உதயநிதி ஸ்டாலின் தந்த யோசனையை முதல்வர் ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார்கள்
Google Oneindia Tamil News

சென்னை: 2 முக்கிய முடிவுகள், தற்போது திமுக தரப்பில் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. என்ன அவை?

கடந்த சில மாதங்களாகவே உட்கட்சி தேர்தல் திமுகவுக்குள் நடந்து வருகிறது.. அந்தவகையில் தற்போது, மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற போகிறது.
இதற்கான மாவட்டத் தலைவர், துணைதலைவர், மாவட்ட துணை செயலாளர்கள், பொருளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடக்க போகிறது.

விழுப்புரம் அருகே அண்ணாசிலை அவமதிப்பு: பாஜகவினர் 3 பேர் அதிரடி கைது விழுப்புரம் அருகே அண்ணாசிலை அவமதிப்பு: பாஜகவினர் 3 பேர் அதிரடி கைது

 பவர்புல் போஸ்டிங்

பவர்புல் போஸ்டிங்

மாவட்ட செயலாளர்கள் பதவிகளுக்கான போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகமாகி வருகின்றன.. காரணம், கட்சியின் மிக முக்கியமான பதவி இதுவாகும்.. அமைச்சர்களைவிட செல்வாக்கு பெற்றவர்கள் இந்த மா.செ.க்கள்.. திமுகவில் மொத்தம் 72 மாவட்டங்கள் உள்ள நிலையில், இதற்குதான் போட்டா போட்டிகள் துவங்கி உள்ளன.. திமுகவை பொறுத்தவரை, வாரிசுகளுக்கே பதவி செல்கிறது என்றும், ஒருவரே பல வருடங்களாக பதவிகளை வகித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் வெடித்து வருகின்றன..

 ஓல்டு இஸ் கோல்டு

ஓல்டு இஸ் கோல்டு

சீனியர்கள் என்றாலும், போட்டியிட்டவர்களுக்கே மறுபடியும் சீட் தருவது, பதவி தருவது என பொறுப்புகள் ஒதுக்கப்பட்டால், கட்சியில் அடிமட்டத்தில் உழைத்து கொண்டிருப்பவர்கள் எப்படி மேலே வருவது என்ற யதார்த்த கேள்விகளையும் பலர் எழுப்பி வருகிறார்கள். அதுமட்டுமல்ல, பல மாவட்டங்களில் 20 வருடங்களுக்கும் மேலாக ஒரே நபர்கள் இருந்து வருவதும், கட்சி தொண்டர்களை சோர்வாக்கி உள்ளது.. அதனால்தான், இந்த முறை இளைஞர்கள் நிறைய பேருக்கு வாய்ப்பு தருவதாக கூறப்படுகிறது..

சைலண்ட்

சைலண்ட்

திமுக ஆட்சி வந்து ஒன்றரை வருட காலத்தில், சில மாவட்ட செயலாளர்கள் மீது நிறைய புகார்கள் அடிக்கடி தலைமைக்கு வந்தபடியே உள்ளன.. அதனால் எந்நேரமும் மா.செ.க்களை முதல்வர் ஸ்டாலின் மாற்றக்கூடும் என்றும் செய்திகள் வெளியான நிலையில், இதுவரை அப்படி மாற்றங்கள் எதுவும் நடக்கவில்லை.. கருணை உள்ளத்தோடு பொறுமை காத்து முதல்வர் வந்த நிலையில், இந்த முறை அதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள்..

 ப்ளான் + 1

ப்ளான் + 1

எனவே, திமுக மாவட்ட செயலாளர் தேர்தலில் சில இடங்களில் சீனியர்களை ஒதுக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.. இதில் தன்னுடைய தரப்பில் யார் யாருக்கெல்லாம் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பது குறித்து உதயநிதி முன்கூட்டியே ஸ்டாலினிடம் ஒரு லிஸ்ட் தந்துவிட்டதாக சொல்கிறார்கள். பல வருடங்களாக ஒருவரே தொடர்ந்து மா.செ. போஸ்டிங்கில் இருந்தால், கட்சி வளர்ச்சியடையாமல் போய்விடும், புதியவர்களை நியமித்தால் எழுச்சி பெறும் என்று உதயநிதி சொன்னாராம்.. இதை அமைதியாக கேட்டுக் கொண்ட ஸ்டாலினும், உதயநிதி கைகாட்டிய ஒருசில இளைஞருக்கு போஸ்டிங் தர யோசித்து வருகிறாராம்..

 ப்ளான் + 2

ப்ளான் + 2

ஆனால், இந்த முடிவை தலைமை கழக நிர்வாகிகளுக்கு சிலருக்கு உடன்பாடில்லையாம்.. என்ன இருந்தாலும், சீனியர்களை விட்டுவிடக்கூடாது என்று எடுத்து சொல்லி வருகிறார்களாம்.. இதில் என்ன மாதிரியான முடிவை ஸ்டாலின் எடுக்க போகிறார் என்று தெரியவில்லை. அடுத்ததாக, திமுகவில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.. இந்த 3 பதவிகளுக்குமே போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.. அதாவது தலைவராக முக ஸ்டாலின், பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டிஆர் பாலு போன்றோரே மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் ஒன்று வட்டமடித்து கொண்டிருக்கிறது..!

English summary
2 ultimate Decision and DMK party has taken 2 important decisions, say sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X