எமனாக வந்த ஏசி... தீ விபத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலி - பல்லாவரத்தில் சோகம்
பல்லாவரத்தில் வீட்டினுள் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
சென்னை: பல்லாவரத்தில் வீட்டினுள் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு நிகழ்ந்த தீ விபத்தில் 2 வயது குழந்தை உடல் கருகி உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தையின் பெயர் பிரிஜிதா. இவர் சென்னை பல்லாவரம் அடுத்த கவுல்பஜார், யசோதா நகரை சேர்ந்தவர் சங்கீதாவின் மகளாவார். சங்கீதா இன்று மாலை தனது வீட்டின் வாசலில் அமர்ந்து பூக் கட்டிக் கொண்டு இருந்துள்ளார்.

பிரிஜிதா படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள் திடீரென தீப்பிடித்துள்ளது. உடனே அதிர்ச்சியடைந்த சங்கீதா வீட்டிற்குள் ஓடினார். குழந்தையை தூக்க முயன்ற போது தீ மளமளவென பரவியதால் குழந்தையை மீட்க முடியாமல் தடுமாறினார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயணைப்பு துறையினரை வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர். இறுதியில்
குழந்தையை பார்த்த போது கட்டிலோடு குழந்தை முற்றிலுமாக எரிந்து போயிருந்தது.
தகவலறிந்து சென்ற சங்கர் நகர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications