கண்ணாடியை திருப்பினா மட்டும் வண்டி எப்படி ஓடும் ஜீவாஆஆஆஆஆஆ! #demonetisation
பணமதிப்பு இழப்பு அறிவிக்கப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது.
சென்னை: 2016 - இதே நாளில்தான் அந்த அறிவிப்பு வெளியானது.. பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நாள்தான் இன்று!!
இந்த அறிவிப்பு வெளியானதுமே ஒட்டுமொத்த நாடும் ஸ்தம்பித்து போய் விட்டது. ஏ.டி.எம் மையங்கள் செயல்படாது என்றும் கூடவே தெரிவிக்கப்பட்டது. கோடிக்கணக்கான மக்களை நடுத்தெருவில் அலையவைத்தது.

புதிய நோட்டுகள்
புதிய ரூபாய் நோட்டுக்கள் உடனடியாக கையில் கிடைக்காமலும், அது எப்படி இருக்கும் என்றுகூட தெரியாமல் மக்களை அல்லாட விட்டது. புதிய ரூபாய் நோட்டுகளை போதிய அளவில் அச்சடிக்காமலும் விட்டது.

உயிரிழந்த அப்பாவிகள்
ஏடிஎம் வரிசையில் சோறு தண்ணி இல்லாமல் காத்த காத்து நின்ற நூற்றுக்கணக்கானோரை உயிரிழக்க செய்தது. இதை பற்றி கேட்டதற்கு, "எல்லையிலே ராணுவ வீரர்கள் தியாகம் செய்யும்போது, இதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாதா" என்று வெகுஜனங்களை அசிங்கப்படுத்தியது.

இது எங்கள் சாதனையே
காங்கிரஸ் முதல் ஒரு கட்சி விடாமல் எல்லோருமே இதை கண்டித்தார்கள்.. எதிர்த்தார்கள்.. கடுமையாக விமர்சித்தார்கள்.. ஆனால் மத்திய பாஜக அரசு எதையுமே காதில் வாங்கவில்லையே... காதில் போட்டுக் கொள்ளவில்லை என்றாலும்கூட பரவாயில்லை, இதனை ஒரு சாதனை என்று இப்போதுவரை சொல்லி கொண்டு இருப்பதைதான் மக்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.

தலையில் விழுந்தது
கடைசியில் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க 8000 கோடியும், ஏடிஎம் மிஷன்களை ரெடி பண்ண 35000 கோடியும், நாட்டின் பொருளாதார இழப்பு 1,50,000 கோடி என கணக்கு காட்டி மக்கள் தலையில் சுமத்தப்பட்டதுதான் மிச்சம்!!

ரகசியம் என்ன?
இதெல்லாம் நடந்து இப்போது 2 வருஷம் ஆகிவிட்டது. 1000 ரூபாயை ஒழிக்கிறேன் என்று சொல்லி அதிக மதிப்புடைய 2000 ரூபாயை கொண்டு வந்த ரகசியம் என்னவென்றே இதுவரை தெரியவில்லை.

மீட்கப்பட்டு விட்டதா?
அதேபோல உறுதியளித்தபடி நாட்டில் கருப்பு பணம் எல்லாம் துடைத்தெறியப்பட்டு விட்டதா? அம்பானி, விஜய் மல்லையா உள்ளிட்டோரின் கருப்பு பணங்கள் அனைத்தும் புழக்கத்தில் இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டதா? என்றும் தெரியவில்லை... "கண்ணாடியை திருப்பினா மட்டும் வண்டி எப்படி ஓடும் ஜீவாவாவாவா.....?" என்றுதான் கேட்க தோன்றுகிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications