20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் எப்போது? - இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தகவல்
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்தார்.
தமிழகத்தில் 20 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளின் உறுப்பினர்கள் காலமானதை அடுத்து அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபோல் முதல்வருக்கு எதிராகவும் தலைமை கொறடாவுக்கு எதிராகவும் 18 எம்எல்ஏக்கள் செயல்பட்டதை அடுத்து அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து அந்த 18 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. எனவே தமிழகத்தில் மொத்தம் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த தேர்தல் தேதி கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட இருந்த நிலையில் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தேதி ஒத்தி போனது.
இந்நிலையில் எப்போது நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் தனியார் தமிழ் செய்தித் தொலைக்காட்சிக்கு இந்திய தலைமை ஆணையர் ராவத் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும்.
திருப்பரங்குன்றம் தொகுதியில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வந்தவுடன் தேர்தல் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும். கஜா புயல் எச்சரிக்கை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதை அரசியல் கட்சியினர் விமர்சிக்கின்றனர். ஒருவேளை தேர்தலை ஒத்திவைக்காமல் நடத்தப்பட்டிருந்தால், புயலால் அந்த இடைத்தேர்தலும் பாதிக்கப்பட்டிருக்கும் என்றார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications