தட்டித் தூக்குது தமிழக அரசு..ரேஷன் கார்டுதாரர்களுக்கு குறைந்தது சிரமம்! அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்
சென்னை: உணவுத் துறையின் மூலம் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று தற்போது வரை 20 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் 3000 புதிய ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டு பொதுமக்களின் சிரமங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டுகள் மூலமாக வழங்கப்படுகிறது. மாதாமாதம் உணவுப்பொருட்கள், பொங்கல் பரிசு தொகை, மகளிர் உரிமை தொகை உள்ளிட்டவை ரேசன் கார்டுகள் மூலம் தான் வழங்கப்படுகிறது.
தற்போது தமிழக முழுவதும் சுமார் 2 கோடியே 24 லட்சம் ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. அதே நேரத்தில் புதிதாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ஜூலை 2024 வரை தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்திருக்கின்றனர். கூட்டுக் குடும்பமாக இருந்தவர்கள் கூட தற்போது மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்காக தனி தனியாக ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் அரசுக்கு வரும் ரேஷன் கார்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும் ரேஷன் கார்டுகள் மூலமாகத் தான் இந்தியா முழுவதும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட தானியங்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த மே மாதம் வரை கூடுதலாக 12 லட்சம் பேர் ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்திருந்தனர். மகளிர் உதவித்தொகை, அரசு வழங்கும் நிவாரணம் போன்ற பல்வேறு உதவித்தொகைகள் பெற ரேஷன் கார்டு தேவை.
இதன் காரணமாக புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதற்கிடையே விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார். இதை அடுத்து ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தமிழகத்தில் 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் இதுவரை 20 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் வடகாடு ஊராட்சியில் முதன் முதலாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து நிகழ்வில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, தற்போது வரை உணவுத் துறையின் மூலம் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்று தற்போது வரை 20 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3000 புதிய ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டு பொதுமக்களின் சிரமங்கள் குறைக்கப்பட்டுள்ளது. புதிதாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பவர்களுக்கும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications