Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2024ம் ஆண்டில் வாகன விற்பனையால் தமிழக அரசுக்கு கொட்டிய பணமழை.. வெளியான புள்ளி விவரங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் 20 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகி உள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. வாகனங்கள் விற்பனை மூலம் அரசுக்கு கடந்த ஒராண்டில் மட்டும் ரூ.11 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது முந்தைய ஆண்டை விட கணிசமாக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே உத்தரப்பிரதேசத்தில் தான் அதிகமான வாகனங்கள் கடந்த ஆண்டு பதிவாகி உள்ளது தெரியவந்துள்ளது.

ஆண்டு தோறும் வாகன விற்பனையின் அளவு நாட்டில் அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடு கடந்த ஆண்டில் பெரிய அளவில் அதிகரித்துள்ளன. இந்தியா முழுவதும் 2024ம் ஆண்டில் எத்தனை வாகனங்கள் விற்பனையாகி உள்ளது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

vehicle chennai rto

இதன்படி நாட்டில் மொத்தம் 1,373 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இதில் கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் 2 கோடியே 61 லட்சத்து 83 ஆயிரத்து 620 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டு 2.40 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதேபோல் அதற்கு முந்தைய ஆண்டான, 2022-ம் ஆண்டு 2.15 கோடி வாகனங்களம், 2021-ம் ஆண்டு 1.89 கோடி வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2024ம் ஆண்டில் வாகன பதிவு உள்ளிட்ட பரிமாற்றங்கள் மூலம் மாநில அரசுகளுக்கு ரூ.98 ஆயிரத்து 494 கோடியே 99 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. ஆனால் கடந்த 2023-ம் ஆண்டு ரூ.87 ஆயிரத்து 670 கோடி அளவிற்கே வருமானம் வந்திருந்தது. 2023ம் ஆண்டை விட 2024ல் சுமார் 20லட்சம் வாகனங்கள் அதிகம் பதிவானதால, சுமார் 11 ஆயிரம் கோடி அளவிற்கு வருமானம் கூடுதலாக அரசுகளுக்கு வந்திருப்பது புள்ளி விவரங்களில் தெரிகிறது.

தேசிய அளவில் வாகன பதிவில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.

நாட்டில் உள்ள வாகன பதிவில் உத்தரப்பிரதேசம் முதலிடம் என்றாலும். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகனப்பதிவு, வாகனப்பதிவை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளில் அதிக பரிமாற்றங்கள் என்ற அடிப்படையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இங்கு 98 லட்சத்து 47 ஆயிரத்து 334 பரிமாற்றங்கள் நடந்திருக்கிறது. அடுத்த இடத்தில் கேரளா, கர்நாடகம், உத்தரபிரதேசம், மகாராஷடிரா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றன.

வாகனங்கள் பதிவு உள்ளிட்டவை மூலம் அதிக வருமானம் ஈட்டிய மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், 2-வது இடத்தில் கர்நாடகமும், 3-வது இடத்தில் தமிழ்நாடும், 4-வது இடத்தில் உத்தரபிரதேசமும், 5-வது இடத்தில் கேரளாவும் இருக்கின்றன. இந்த பட்டியலின்படி, நாட்டிலேயே தென்மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் டாப் ஐந்தில் 3 இடங்களை பிடித்துள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தம் 148 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன. இங்கு கடந்தாண்டு (2024) 19 லட்சத்து 53 ஆயிரத்து 513 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதேநேரம் கடந்த 2023-ம் ஆண்டு 18.26 லட்சமும், 2022-ம் ஆண்டு 17 லட்சமும், 2021-ம் ஆண்டு 15.15 லட்சமும் வாகனங்கள் பதிவாகி இருக்கின்றன. அதேபோல் தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ரூ.10 ஆயிரத்து 76 கோடியே 64 லட்சம் வருவாய் இந்த 2024ம் ஆண்டில் கிடைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இது முந்தைய ஆண்டினை (2023) விட 33.29 சதவீதம் என்கிறார்கள் அதிகாரிகள். ஏனெனில் கடந்த 2023-ம் ஆண்டு ரூ.7 ஆயிரத்து 560 கோடியும், 2022-ம் ஆண்டு ரூ.6 ஆயிரத்து 449 கோடியும், 2021-ம் ஆண்டு ரூ.5 ஆயிரத்து 10 கோடியும் வருவாய் கிடைத்திருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் வாகனங்கள் பதிவில் சென்னை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முதலிடத்திலும். 2-வது இடத்தில் பூந்தமல்லியும், 3-ம் இடத்தில் கோவை வடக்கும் உள்ளன. , அதிக வருவாய் ஈட்டி தருவதில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஆர்டிஓ அலுவலங்கள் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+