சர்ர்ரென குறைந்த மைலேஜ்.. என்ஜின் திணறுது.. பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு.. கதறும் வாகன ஓட்டிகள்
சென்னை: 20% எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வாகன உரிமையாளர்கள் மத்தியில் பல்வேறு கவலைகள் எழுந்துள்ளன. எரிபொருள் செலவு அதிகரிப்பது, வாகனத்தின் செயல்திறன் மந்தமாவது, பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பது போன்ற புகார்களைப் பலர் தெரிவிக்கின்றனர்.
முக்கியமாக பலரும் மைலேஜ் குறைந்துவிட்டது.. வண்டி திடீர் என்று பவர் இல்லாமல் குறைந்துவிட்டது என்று விமர்சனங்கள் வைக்கின்றனர். பெரும்பாலான இந்திய சாலைகளில் ஓடும் வாகனங்கள் இன்னும் E20 ஏற்றவை அல்ல என்பதால், சேவை மையங்கள் இயந்திர தேய்மானம் மற்றும் கேஸ்கெட் செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதாகக் கூறுகின்றன. இதனால் நுகர்வோர் பாகங்களை மறுசீரமைக்கவோ அல்லது மாற்றவோ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

20% எத்தனால் கலந்த பெட்ரோல்
20% எத்தனால் கலந்த பெட்ரோல் காரணமாக காரின் மைலேஜ் 11-12 கிமீ/லிட்டரில் இருந்து 7-8 கிமீ/லிட்டராகக் குறைந்ததாக பலரும் தெரிவித்துள்ளனர். 20% எத்தனால் கலந்த பெட்ரோல் எடை கூடுதலாக உள்ளது. அதோடு பவர் இல்லை. மைலேஜ் குறைந்துவிட்டது என்று கூறுகின்றனர்.
பலரும் தங்கள் காரின் மைலேஜ் 20% குறைந்ததாகவும், அத்துடன் வாகனம் தடுமாறுவது மற்றும் வேகம் குறைவாக இருப்பதையும் தெரிவித்துள்ளனர். E20 அல்லாத வாகனங்களில் எரிபொருள் சிக்கனம் சுமார் 7% குறையலாம் என்று தொழில்துறை நிர்வாகிகள் மதிப்பிடுகின்றனர். இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் ஆய்வுகள் 1-6% மைலேஜ் குறைவதைக் காட்டுகின்றன.
எத்தனால் பெட்ரோல் கலப்பு - மத்திய அரசு விளக்கம்
பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதால் (E20) மைலேஜ் குறையும் என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இதனால் வாகனத்திற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக பழைய வாகனங்கள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் தொடர்பான பல கவலைகள் ஊடகங்களில் எழுப்பப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தக் கவலைகள் பெரும்பாலும் அறிவியல் ஆதாரங்கள் அல்லது நிபுணர் ஆய்வுகளால் ஆதரிக்கப்படாத, அடிப்படையற்ற கூற்றுகள் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோலால் பெரிய அளவில் மைலேஜ் குறையும் என்பது உண்மையல்ல; 4 சக்கர வாகனங்களுக்கு 1 - 2% மற்ற வாகனங்களுக்கு 3 - 6% வரை மைலேஜ் குறைய வாய்ப்பு; எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களின் என்ஜின் பாதிக்கப்படும் என்பதில் உண்மையில்லை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திமுக விமர்சனம்
திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் இது தொடர்பாக செய்துள்ள போஸ்டில், உங்க டூத் பேஸ்டில் உப்பு இருக்கா என்பது போல உங்க பெட்ரோல்ல எத்தனால் இருக்கா என கேட்கும் நிலையில் இருக்கிறோம். எத்தனால் கலந்தால் மைலேஜ் குறையும் என பெட்ரோலியத்துறை அமைச்சகமே அறிவிக்கை கொடுக்கிறது! மோட்டார் வாகனத்தின் பாகங்கள் பழுதுபடும் எனவும் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் யாருக்கு லாபம்? நமக்கு கண்டிப்பாக இல்லை, என்றுள்ளார்.
எத்தனால்-பெட்ரோல் கலவை
இது தொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்ப்பரேட்டட் மற்றும் எரிபொருள்-உட்செலுத்தப்பட்ட வாகனங்களை 10,000 கி.மீ.க்கு ஒருமுறை சோதனை செய்து, அவற்றின் முதல் 100,000 கி.மீ. பயன்பாட்டில் எத்தனால்-பெட்ரோல் கலவைகளின் செயல்பாடு குறித்து சர்வதேச ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வுகளின் முடிவில், சக்தி, முறுக்குவிசை மற்றும் எரிபொருள் நுகர்வு ஆகியவற்றில் புள்ளிவிவர ரீதியாக குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இந்தியாவின் ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி சங்கம் (ARAI), இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பெட்ரோலியம் (IIP) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (R&D) ஆகியவை நடத்திய பொருள் பொருந்தக்கூடிய தன்மை மற்றும் இயக்கத்தன்மை சோதனைகளில், பழைய வாகனங்கள்கூட E20 எரிபொருளில் இயங்கும்போது குறிப்பிடத்தக்க மாறுபாடுகள், செயல்திறன் சிக்கல்கள் அல்லது அசாதாரண தேய்மானம் ஆகியவற்றை வெளிப்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், E20 எரிபொருள் வெப்ப மற்றும் குளிர் தொடக்கச் சோதனைகளில் எந்த இயந்திர சேதமும் இல்லாமல் தேர்ச்சி பெற்றது.
பல கவலைகளுக்கு உரிய விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
எரிபொருள் சிக்கனம்: பெட்ரோலை விட எத்தனால் குறைந்த சக்தி அடர்த்தி கொண்டிருப்பதால், எரிபொருள் மைலேஜில் ஒரு சிறிய சரிவு ஏற்படலாம். E10-க்காக வடிவமைக்கப்பட்டு E20-க்காக அளவீடு செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு இது 1-2% ஆகவும், மற்ற வாகனங்களுக்கு சுமார் 3-6% ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிறிய சரிவை மேம்படுத்தப்பட்ட இயந்திர மறுசீரமைப்பு மற்றும் E20 இணக்கமான பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் மேலும் குறைக்க முடியும்.
முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் ஏற்கனவே இவற்றை ஏற்றுக்கொண்டுள்ளனர். உண்மையில், சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் மேனுஃபேக்சரர்ஸ் (SIAM) ஏப்ரல் 2023 முதல் மேம்படுத்தப்பட்ட பாகங்களுடன் E20 இணக்கமான வாகனங்கள் சந்தைக்கு வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, E20 எரிபொருள் சிக்கனத்தில் கடுமையான சரிவை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு உண்மையில் தவறானது, என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications