மழை காலத்தில்.. எத்தனால் கலந்த பெட்ரோல் போட்டால் ஆபத்து? டீலர்கள் அனுப்பிய மெசேஜ்.. போச்சு
சென்னை: சென்னையில் மழை காலத்தில் எத்தனால் கலக்காத பெட்ரோல் விற்பனையை வழங்க வேண்டும் என்று பெட்ரோல் நிறுவனங்களுக்கு டீலர்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும், கனமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் எரிபொருள் விற்பனையாளர்கள் லட்சக்கணக்கான ரூபாய்களை இழக்கின்றனர். வடகிழக்கு பருவமழை நெருங்கி வருவதால், டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனையாளர்கள் தற்போதே கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

விற்பனை நிலையங்களில் வெள்ளம் சூழ்வது மற்றும் நிலத்தடி பெட்ரோல் தொட்டிகளில் தண்ணீர் கசிவது போன்ற அச்சங்கள் நிலவி வருகின்றன. வழக்கம்போல் மழைக்காலத்தை எதிர்கொள்ள ஜெனரேட்டர்கள், கூடுதல் ஷிஃப்டுகளுக்கு பணியாளர்கள் மற்றும் தண்ணீரை வெளியேற்ற பம்புகளுடன் தயாராக இருப்பதாக பெட்ரோல் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
வாகன ஓட்டிகள்
ஓவ்வொரு ஆண்டும், நகரில் உள்ள சில சில்லறை விற்பனை நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்து லட்சக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. குறிப்பாக எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்த பாதிப்பு அதிகரித்துள்ளது.
20% எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வாகன உரிமையாளர்கள் மத்தியில் பல்வேறு கவலைகள் எழுந்துள்ளன. எரிபொருள் செலவு அதிகரிப்பது, வாகனத்தின் செயல்திறன் மந்தமாவது, பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பது போன்ற புகார்களைப் பலர் தெரிவிக்கின்றனர்.
முக்கியமாக பலரும் மைலேஜ் குறைந்துவிட்டது.. வண்டி திடீர் என்று பவர் இல்லாமல் குறைந்துவிட்டது என்று விமர்சனங்கள் வைக்கின்றனர். பெரும்பாலான இந்திய சாலைகளில் ஓடும் வாகனங்கள் இன்னும் E20 ஏற்றவை அல்ல என்பதால், சேவை மையங்கள் இயந்திர தேய்மானம் மற்றும் கேஸ்கெட் செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதாகக் கூறுகின்றன. இதனால் நுகர்வோர் பாகங்களை மறுசீரமைக்கவோ அல்லது மாற்றவோ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது
தண்ணீர் கலந்தால் சிக்கல்
இந்த எத்தனால் கலந்த பெட்ரோலில் தண்ணீர் கலந்தால்.. எத்தனால் - பெட்ரோல் இரண்டும் தனியாக பிரிந்துவிடும். ஒன்று மேலேயும்.. ஒன்று கீழேயும் வந்துவிடும். இரண்டும் தனி தனி லேயர்களாக மாறிவிடும். அப்படி நடந்தால் அதை போடும் வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.
இதனால் சென்னையில் மழை காலத்தில் எத்தனால் கலக்காத பெட்ரோல் விற்பனையை வழங்க வேண்டும் என்று பெட்ரோல் நீர்காநகல் கோரிக்கை விடுத்துள்ளன.
தற்போது 20% எத்தனால் கலந்த பெட்ரோல் (MS) பயன்படுத்தப்படுகிறது. நிலத்தடி தொட்டிகளில் தண்ணீர் புகுந்தால், எத்தனால் எரிபொருளில் இருந்து பிரிந்து, வெள்ளையாக மாறும். மழைக்காலத்தில் குறைந்தபட்சம் கலப்படம் இல்லாத பெட்ரோலை வழங்கும்படி அரசுக்கு சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களிடம் (OMCs) பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
நிலத்தடி தொட்டிகளுக்கு செல்லும் இடைவெளிகளை மூடுவதற்கு எண்ணெய் நிறுவனங்கள் சீலண்டுகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தாலும், வெள்ள நீர் புகும் வாய்ப்புள்ள இடைவெளிகள் இன்னும் இருப்பதாக டீலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த இழப்புகளுக்கான இன்சூரன்ஸை இப்போதே டீலர்கள் எடுத்தால், குறைந்தபட்சம் 70% இழப்புகளை ஈடுசெய்ய முடியும் என்று பெட்ரோல், டீசல் டீலர்கள் தெரிவிக்கின்றன.
20% எத்தனால் கலந்த பெட்ரோல்
ஏற்கனவே 20% எத்தனால் கலந்த பெட்ரோல் காரணமாக காரின் மைலேஜ் 11-12 கிமீ/லிட்டரில் இருந்து 7-8 கிமீ/லிட்டராகக் குறைந்ததாக பலரும் தெரிவித்துள்ளனர். 20% எத்தனால் கலந்த பெட்ரோல் எடை கூடுதலாக உள்ளது. அதோடு பவர் இல்லை. மைலேஜ் குறைந்துவிட்டது என்று கூறுகின்றனர்.
பலரும் தங்கள் காரின் மைலேஜ் 20% குறைந்ததாகவும், அத்துடன் வாகனம் தடுமாறுவது மற்றும் வேகம் குறைவாக இருப்பதையும் தெரிவித்துள்ளனர். E20 அல்லாத வாகனங்களில் எரிபொருள் சிக்கனம் சுமார் 7% குறையலாம் என்று தொழில்துறை நிர்வாகிகள் மதிப்பிடுகின்றனர். இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் ஆய்வுகள் 1-6% மைலேஜ் குறைவதைக் காட்டுகின்றன. மழை காலத்தில் இது மேலும் பாதிப்பை சந்திக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications