வேறலெவலுக்கு போகும் பள்ளிகள்.. சென்னைவாசிகளுக்கு சூப்பர் நியூஸ் !
சென்னை மாநகராட்சி பள்ளிகள் ரூ.200 கோடியில் சர்வதேச தரத்திற்கு மாற உள்ளது
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகள் ரூ.200 கோடியில் சர்வதேச தரத்திற்கு மாற உள்ளது. 'சிட்டிஸ்' மற்றும் 'சிங்காரச் சென்னை - 2.0' ஆகிய திட்டங்களின் கீழ், பள்ளிகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
அரசு பள்ளிகள் என்றால் ஓடுகள் வேயப்பட்ட பழைய சுவர், மரத்தடி பாடம், மிக அசுத்தமான கழிவறைகள் என்று இருந்த நிலைமை தற்போது இல்லை. மிகப்பெரிய அளவில் அரசு பள்ளிகள் மாறிவிட்டன. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள் வசதிகளில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளைவிட அரசு பள்ளிகளின் தரம் உயர்த்துவதற்கான அனைத்து பணிகளும் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் உள்ள அரசு பள்ளிகள் சர்வதே தரத்தில் மாற்றப்பட உள்ளது. வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி சர்வதேச தரத்தில் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

எத்தனை பள்ளிகள்
சென்னை மாநகராட்சியின் கீழ் 119 தொடக்கப்பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலை மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளிகளில் 1.12 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த பள்ளிகள் 'சிட்டிஸ்' மற்றும் 'சிங்காரச் சென்னை - 2.0' ஆகிய திட்டங்களின் கீழ், சென்னை மாநகராட்சி பள்ளிகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படுகின்றன.

புதிய வசதிகள்
200 கோடி ரூபாய் செலவில் 'சிட்டிஸ்' என்ற திட்டத்தின் கீழ் 28 பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் உருவாக்கப்பட்ட உள்ளன, அதேபோல் பள்ளியில் உள்கட்டமைப்புகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளது. புதிய கட்டடங்கள் கட்டுதல், இணையதள வசதியுடன் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் உருவாக்கப்பட உள்ளது. பள்ளி முழுதும் 'வை - பை' வசதி, 'வெஸ்டன் டாய்லெட்' வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது.

மைதானங்கள்
சமையலறையும், மாணவர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் 'டைனிங்' வசதியுடன் நவீனப்படுத்தப்பட இருக்கிறது. , 'ஹைடெக்' ஆய்வகங்கள், கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து உள்ளிட்ட விளையாட்டு மைதானங்களும் பள்ளிகளில் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தண்டையார் பேட்டை மண்டலத்தில் 6 பள்ளிகளும், ராயபுரம் மண்டலத்தில் 2 பள்ளிகளும், திருவிக நகர் மண்டலத்தில் 3 பள்ளிகளும் சர்வதேச தரத்தில் மாற்றப்பட உள்ளன,

சர்வதேச தரம்
இதேபோல் அண்ணாநகர் மண்டலத்தில் 3 பள்ளிகளும், அடையாறு மண்டலத்தில் 3 பள்ளிகளும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 5 பள்ளிகளும் கோடம்பாக்கம் மண்டலத்தில் ஐந்து பள்ளிகளும், திருவிநகர் நகர் மண்டலத்தில் 2 பள்ளிகளும் சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்தப்பட உள்ளன. சர்வதேச தரத்திற்கு பள்ளிகளை மாற்றும் பணிகள் வேகமெடுத்துள்ளன.

எப்படி இருக்கும்
தற்போது ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை, மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி 3.83 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது அனைத்து வகுப்பறைகளிலும் தரமான மேஜை, நாற்காலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பள்ளி நுழைவாயில் அழகுற, அனைவரையும் கவரும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்களின் சிறப்புகளை தெரிந்து கொள்ளும் வகையிலும் வகுப்பறைகளில வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன,
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications