முதல்வர் அறையில் இருந்த ரிப்போர்ட்! பார்த்ததும் ஸ்டாலின் கையில் எடுத்த "மிஷன்".. அப்போ அதிமுக, பாஜக?
சென்னை: தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக சார்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வெற்றி இலக்கு 200+ தொகுதிகள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு மிஷன் 200+ என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
மிஷன் 200+ என்பதை ஸ்டாலின் கொண்டு வருவதற்கு பின் முக்கியமான காரணங்கள் இருக்கிறதாம். ஸ்டாலின் மேசையில் வைக்கப்பட்ட ஒரு ரிப்போர்ட்தான்.. அவருக்கு இந்த உற்சாகத்தை கொடுத்துள்ளதாம்.

சட்டசபை தேர்தல்: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் சட்டசபை வாரியாக எந்த கட்சி எத்தனை வாக்குகள் பெற்றுள்ளன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு கீழ் இருக்கும் சட்டசபை தொகுதியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைத்தன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
2024 லோக்சபா தேர்தல் சமீபத்தில் முடிவுகள் வெளியானது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும். தமிழ்நாட்டில் திமுக கூட்டணி புதுச்சேரியுடன் சேர்த்து 40 இடங்களில் வென்றுள்ளது. பாஜக, அதிமுக ஒரு இடங்களில் கூட வென்றது இல்லை.
சட்டசபை தொகுதி ரீதியான தேர்தல் விவரம்: இந்த நிலையில் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் சட்டசபை வாரியாக எந்த கட்சி எத்தனை வாக்குகள் பெற்றுள்ளன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி 221 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக கூட்டணி முதலிடம் பிடித்துள்ளது.
8 இடங்களில் அதிமுக முதலிடம் பிடித்துள்ளது. 3 தொகுதிகளில் பாமக முதலிடம் பிடித்துள்ளது. 2 தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
பாஜகவின் 4 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் உள்பட, பாஜக/தாமரை போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் முதலிடம் வரவில்லை. அதிமுக 8 தொகுதிகளில் அதாவது எடப்பாடி, குமாரபாளையம், சங்ககிரி, பரமத்திவேலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை தொகுதிகளில் முதலிடம் பிடித்துள்ளது.
பாமக 3 தொகுதிகளில் பெண்ணாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி தொகுதிகளில் முதலிடம் பிடித்துள்ளது. தேமுதிக 2 தொகுதிகளில் திருமங்கலம், அருப்புக்கோட்டை முதலிடம் பிடித்துள்ளது. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குகளிலும் பாஜக ஒரு தொகுதியில் கூட முதலிடம் இல்லை. அதிமுக 8 தேமுதிக 2 பாமக 3 தொகுதிகளில் முதலிடம் பிடித்துள்ளது.
ஸ்டாலினுக்கு ரிப்போர்ட்: இதை பற்றித்தான் முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் ரிப்போர்ட் சென்றுள்ளதாம். அதன்படி தற்போது சட்டசபை தேர்தல் நடந்தால் திமுக கிளீன் ஸ்வீப் செய்ய வாய்ப்புகள் உள்ளன. அதிமுக படுதோல்வி அடையும் என்றும் ரிப்போர்ட் தெரிவிக்கின்றன. இதை மனதில் வைத்தே ஸ்டாலின் 200+ மிஷன் என்பதை அறிமுகப்படுத்தி உள்ளாராம்.
2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக மோசமாக செயல்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக 1 இடத்தை கூட வெல்ல முடியவில்லை. தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கவே அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை சென்றார். ஆனால் அந்த யாத்திரையும் பலன் அளிக்கவில்லை.
பாஜக முன்னாள் தலைவர் எல் முருகனின் வேல் யாத்திரைக்கு கீழ் பாஜக தமிழ்நாட்டில் 4 எம்எல்ஏ இடங்களை வென்றது. அதேபோல் தமிழிசை தலைவராக இருந்த போது 2 இடங்களை பாஜக வென்றது.
ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலைக்கு கீழ்.. அவர் என் மண் என் மக்கள் யாத்திரை சென்றும் கூட ஒரு எம்பி சீட் கூட கிடைக்கவில்லை. அவரின் அரசியல் டிராக் ரெக்கார்ட் இதுவரை பூஜ்ஜியமாகவே உள்ளது. இந்த என் மண் என் மக்கள் யாத்திரை வாக்கு சதவிகிதம் ரீதியாகவும், இடங்கள் ரீதியாகவும் சரி அவருக்கும் கட்சிக்கும் பலன் கொடுக்கவே இல்லை, என்று ரிப்போர்ட்டுகள் கூறுகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications