லைன்ல நிக்க தேவையில்லை.. ரூ. 2000-ஐ வயதானோர் எப்படி மாற்றுவது தெரியுமா? இதோ பாருங்க ஸ்பெஷல் அறிவிப்பு
சென்னை: 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்ததை தொடர்ந்து, நாளை முதல் அதாவது 23ம் தேதி முதல் வங்கிகளில் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.. அதேசமயம், வயதானவர்கள் 2000 ரூபாய் மாற்றி கொள்வது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டது.. நாளை முதல் வங்கிகளில் இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.. இதற்கு செப்டம்பர் 30ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சிறப்பு கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் வயதானவர்கள் வரிசையில் நின்று மாற்றாமல் அவர்களுக்கு தனி வசதி உருவாக்கப்பட்டு ரூபாய் நோட்டுகள் மாற்றி கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது..
அதாவது, ஒரே நேரத்தில் ஒருவர் பத்து 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்கள். இந்நிலையில், வயதானவர்கள் எப்படி 2000 ரூபாய் மாற்றுவது என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன..
நாளைய தினம், முதல் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் மாற்றப்படவிருக்கிறது.. இதற்காக அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நாளை காலையில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த கூட்டத்தில் என்ன செய்ய வேண்டும்? கஸ்டமர்களுக்கு எப்படி வசதி செய்து தரவேண்டும்? என்றெல்லாம் ஆலோசிக்கப்படுகிறது.
ஆனால், முன்பு போல கூட்டம் அதிகமாக வர வாய்ப்பு இல்லை என்கிறார்கள்... காரணம், 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக அடித்தட்டு மக்களிடம் புழங்கவும் வாய்ப்பில்லை. எனினும், வங்கிகளில் மற்ற பணிகள் பாதிக்காத வண்ணம் கஸ்டமர்களின் வசதிக்காகவும் 2000 ரூபாய் நோட்டு மாற்றுவதற்கு சிறப்பு கவுண்டர்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.. ஒருவேளை, கூட்டம் அதிகமானால் வரிசையில் ஒருவர் பின் ஒருவராக நிற்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
வயதானவர்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அவர்களுக்கு, சாமியானா பந்தல் போடப்படும்.. இருக்கையும் செய்யப்படுகிறது.. வயதானவர்கள் வரிசையில் நின்று மாற்றாமல், அவர்களுக்கு தனி வசதி உருவாக்கப்பட்டு ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்படும்.. ஒருவர் ஒரே நேரத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுகளை அதாவது 20 ஆயிரம் வரை மாற்றிக் கொள்ளலாம். பணம் மாற்றிக் கொடுப்பதற்கு கூடுதலாக வங்கிகளில் பணம் இருப்பு வைக்க அனைத்து கிளைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு பொதுமக்கள் எந்தவொரு அடையாள ஆவணத்தையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications