ரஜினி.. மோகன்லால்.. ''பாகு'' பிரபாஸ்.. தேர்தலுக்காக தென்னிந்தியாவில் நடிகர்களை குறி வைக்கும் பாஜக!
லோக்சபா தேர்தலில் தென்னிந்தியாவில் கால் வைப்பதற்காக நடிகர்களின் ஆதரவை பெறவும் பயன்படுத்திக் கொள்ளவும் பாஜக கட்சி திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது.
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தலில் தென்னிந்தியாவில் கால் வைப்பதற்காக நடிகர்களின் ஆதரவை பெறவும் பயன்படுத்திக் கொள்ளவும் பாஜக கட்சி திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது.
லோக் சபா தேர்தல் நடக்க இன்னும் முழுதாக 4 மாதங்கள்தான் இருக்கிறது. காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளும் மிக தீவிரமாக இந்த தேர்தலுக்காக உழைத்து வருகிறது.
இந்த நிலையில் தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சி பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாறாக பாஜக வேறு சில திட்டங்களை வைத்து இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

என்ன திட்டம்
லோக்சபா தேர்தலில் தென்னிந்தியாவில் கால் வைப்பதற்காக நடிகர்களின் ஆதரவை பெற பாஜக கட்சி திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது. அதன்படி தென்னிந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்களில் பாஜக முக்கிய நடிகர்களை பிரச்சாரம் செய்ய வைக்க திட்டமிட்டு இருக்கிறது. சிலரை பிரச்சாரம் மட்டுமில்லாமல் தேர்தலில் போட்டியிட வைக்கவும் பாஜக திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது.

பிரபாஸ் வருகிறார்?
லோக்சபா தேர்தலில் பாஜக எப்படியாவது ஆந்திராவில் அதிக இடங்களை பிடிக்க முயன்று கொண்டு இருக்கிறது. இதனால் தற்போது பிரபாஸை தேர்தல் நேரத்தில் பயன்படுத்த பாஜக திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பிரபாஸை பிரச்சாரத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல், தேர்தலில் நிற்க வைக்கவும் பாஜக திட்டமிடுகிறது. பிரபாஸும் இந்த திட்டத்தில் இருப்பதாகவே தகவல்கள் வருகிறது.

மோகன்லால் என்ன
கேரளாவில் நடிகர் மோகன்லால் எப்போது வேண்டுமானாலும் பாஜகவில் சேர்வார் என்று கூறுகிறார்கள். மோகன்லால் கடந்த ஆண்டு பிரதமர் மோடியை சந்தித்த போதே இது தொடர்பான வதந்திகள் வந்தது. இந்த நிலையில் அவர் தேர்தல் நேரத்தில் பாஜகவிற்காக களத்தில் குதிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அப்படி நடக்கும்பட்சத்தில் கேரளாவில் பாஜக கால் பதிக்க வாய்ப்புள்ளது.

ரஜினிகாந்த்
தமிழகத்தில் சில பிரபலமான நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் போக நடிகர் ரஜினியை தேர்தல் நேரத்தில் பயன்படுத்தலாம் என்று பாஜக திட்டமிட்டு இருக்கிறது. தேர்தலின் போது ரஜினியை பாஜகவிற்காக பிரச்சாரம் செய்ய அழைக்கலாம் என்று கூறுகிறார்கள். தனிக்கட்சி தொடங்கும் எண்ணத்தில் இருக்கும் ரஜினி இதை ஏற்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்னும் சில
இதுமட்டுமில்லாமல் தெலுங்கானா, ஆந்திராவிலும் சில நடிகர்களை பாஜக பயன்படுத்தும் என்று கூறுகிறார்கள். அதோடு கிரிக்கெட் அணியில் இருக்கும் சில தென்னிந்திய நட்சத்திரங்களையும் பாஜக பயன்படுத்த வாய்ப்புள்ள என்கிறார்கள். இது பாஜகவிற்கு பலன் அளிக்குமா என்பதை தெரிந்துகொள்ள 4 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
-
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications