சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3 கட்சிகள்.. தமிழகத்தில் மெகா கூட்டணிக்கு திட்டமிடும் பாஜக.. ஜன.18ல் பேச்சுவார்த்தை!

லோக் சபா தேர்தலுக்காக பாஜக வரும் ஜனவரி 18ம் தேதியில் இருந்து தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: லோக் சபா தேர்தலுக்காக பாஜக வரும் ஜனவரி 18ம் தேதியில் இருந்து தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது.

லோக் சபா தேர்தல் வரும் மே மாதத்தில் நடக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இதற்காக கட்சிகள் தீவிரமாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் பாஜக பெரிய கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டது.

எப்போது தொடங்குகிறது

எப்போது தொடங்குகிறது

லோக் சபா தேர்தலுக்காக பாஜக வரும் ஜனவரி 18ம் தேதியில் இருந்து கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது. இதற்காக பாஜக இப்போதே பொறுப்பாளர்களை நியமித்து இருக்கிறது. பாஜக சார்பாக மூத்த உறுப்பினர் பியூஸ் கோயல் மற்றும் சிடி ரவி ஆகியோர் தமிழகம் வர இருக்கிறார்கள்.

இரண்டு முக்கிய கட்சிகள்

இரண்டு முக்கிய கட்சிகள்

அதன்படி அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வருகிறது. 18ம் தேதி அன்றே அதிமுகவினருடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அதற்கு பின் தேமுதிகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்றாவது முக்கிய கட்சி

மூன்றாவது முக்கிய கட்சி

இது இல்லாமல் மூன்றாவதாக பாமகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. பாஜக தமிழக தலைவர் தமிழிசை கூறியது போல, பாஜக தமிழகத்தில் பெரிய கூட்டணியை அமைக்க முயன்று வருகிறது. அதன்படி அதிமுக - தேமுதிக- பாமக என்று பெரிய கூட்டணியை உருவாக்க பாஜக முயன்று வருகிறது.

நடிகர் கட்சி

நடிகர் கட்சி

இது இல்லாமல் மூன்றாவதாக பாஜக இன்னொரு நடிகரையும் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது. ஆனால் ரஜினியா, கமல்ஹாசனா என்ற விவரம் வெளியாகவில்லை. ஒருவேளை ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால், பாஜக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

English summary
2019 Lok Sabha Election: BJP hopes for Mega Alliance in Tamilnadu with AIADMK, PMK and DMDK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X