தமிழகத் தேர்தல் 2021: மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் யார்?
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 1 நாள் மட்டுமே இருக்கும் நிலையில், 2021 சட்டசபைத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.
தமிழக சட்டசபைத் தேர்தலின் இறுதிக் கட்ட பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் 2021 சட்டசபைத் தேர்தலில் நடந்த முக்கிய சம்பவங்கள் தொடர்பாக நமது ஒன் இந்தியா தமிழ் தொடர்ந்து வாசகர்களுக்கு நினைவூட்டி வருகிறது.

ஆத்தூரில் ஐ.பெரியசாமி
இந்த நிலையில் கடந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர்கள் தொடர்பாக விரிவாக பார்க்கலாம். அதன்படி 2021 சட்டசபைத் தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட ஐ.பெரியசாமி தன்னை எதிர்த்து பாமக சார்பாக களமிறக்கப்பட்ட திலகபாமாவை 1,35,571 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திருவண்ணாமலையில் எ.வ.வேலு
தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் என்ற பெருமையையும் ஐ.பெரியசாமி பெற்றார். இவர் பெற்ற மொத்த வாக்கு சதவிகிதம் 72.60 ஆகும். தொடர்ந்து திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலு தன்னை எதிர்த்து களமிறங்கிய பாஜக வேட்பாளர் தனிகைவேலை 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
எடப்பாடியில் எடப்பாடி பழனிசாமி
பின்னர் பூந்தமல்லி தொகுதியில் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ராஜமன்னாரை 94,110 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதையடுத்து எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி திமுக வேட்பாளர் சம்பத் குமாரை 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்
திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட கே.என்.நேரு அதிமுக வேட்பாளர் பத்மநாபனை 85,109 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமை 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அதேபோல் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தன்னை எதிர்த்து களமிறங்கிய பாமக வேட்பாளர் கசாலியை 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
-
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications