தாகம் தீர்க்க ஏரிகள் பக்காவாக ரெடி.. 2021ல் வறட்சி வராது.. சென்னைக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன வெதர்மேன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 2021-ஆம் ஆண்டு வறட்சி இல்லாத சூழல் உருவாகும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. நாளை மறுநாள் முதல் மழை பெய்யக் கூடும் ன வானிலை மையங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது வலைப்பக்கத்தில் கூறுகையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் தண்ணீர் இருப்பு 6 டிஎம்சியாக உள்ளது.

நல்ல ஆண்டு

நல்ல ஆண்டு

இந்த முறை பருவமழை நல்ல பலனைக் கொடுக்கும் என்பதால் நவம்பர் இறுதிக்குள் அனைத்து ஏரிகளும் நிரம்பிவிடும். இது மிகவும் நல்லச் செய்தி. வரும் 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு, மாசடைந்த ஆறுகளில் தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகள் நடைபெற்றால் இந்த ஆண்டு நல்ல ஆண்டாக அமையும்.

நவம்பரில் கனமழை

நவம்பரில் கனமழை

அக்டோபர் 22, 29-ஆம் தேதிகளில் சென்னையில் நல்ல மழை பெய்தது. இதனால் நிலத்தடி நீர் வெகுவாக உயர்ந்தது. இந்த நவம்பரில் கனமழை பெய்தால் ஏரிகளில் நிறைய நீர் தேங்கும். கிருஷ்ணா மற்றும் பெண்ணாறு ஆற்று பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் செப்டம்பர் மாதம் இறுதியில் கிருஷ்ணா மற்றும் பெண்ணாறுகளில் இருந்து நீர் பூண்டி ஏரிக்கு கிடைத்தது.

சோமாசீலா

சோமாசீலா

1996-ஆம் ஆண்டு தெலுங்கு கங்கை கால்வாய் திட்டத்தை தொடங்கியதன் பிறகு முதல்முறையாக கண்டலேறு அணை 58 டிஎம்பி தண்ணீரை சேமித்து வைத்துள்ளது. அதுபோல் இரு ஆண்டுகளில் சோமாசீலாவில் 75 டிஎம்சி தண்ணீர் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.

கிருஷ்ணா நீர்

கிருஷ்ணா நீர்

பெண்ணாற்றிலும் இந்த ஆண்டு நல்ல மழை பெய்தது. ஜீரோ பாயிண்டில் கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு 12 டிஎம்சி நீர் வரத்தாக இருக்கிறது. இன்றைய தேதி வரை 2 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை பெற்றுள்ளோம். ஒரு வேளை நமக்கு பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்தாலும் (அப்படி நடக்காது), கிருஷ்ணா நீரை பயன்படுத்தி நமது ஏரிகளை நிரப்ப முடியும்.

10 டிஎம்சி

10 டிஎம்சி

12 டிஎம்சி நீரில் 10 டிஎம்சி கிருஷ்ணா நீரில் நம் பங்கு இருக்கிறது. நாளை மறுநாள் முதல் கடலூர் பகுதிகளில் நல்ல மழை பெய்யும். பருவமழையும் நன்றாக பெய்யும். ஒரு வேளை பொய்த்து போனாலும் மேட்டூர் அணையிலிருந்து வரும் காவிரி நீரை வைத்து வீராணத்தை நிரப்பலாம். எனவே 2021-ஆம் ஆண்டு வறட்சி இல்லாத தமிழகத்தை நாம் பார்க்கவுள்ளோம். அது நிலத்தடி நீராக இருந்தாலும் சரி, பைப் லைன் நீராக இருந்தாலும் சரி பிரச்சினையே இல்லை என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+