Happy New Year 2022: உலகிலேயே முதலில் புத்தாண்டை வரவேற்கும் நாடு எது தெரியுமா? கடைசி நாடு இதுதான்
சென்னை: புத்தாண்டை முதல்முதலில் வரவேற்கும் நாடு எது தெரியுமா? கடைசியாக புத்தாண்டை கொண்டாடும் நாடு எது தெரியுமா?
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்பது உலகம் முழுவதும் தழுவிய கொண்டாட்டமாகும்.. இதற்கு சாதி, மதம், இனம், மொழி எதுவும் இல்லை.. உலக மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் முக்கியமான நாளாகும்..
தமிழ் புத்தாண்டு என்பது மாநிலம் சார்ந்தது என்றாலும், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் அளவுக்கு கேளிக்கை, விழாக்களின் முக்கியத்துவத்தை பெறுவதில்லை..

இரவு
பொதுவாக, பூமிப்பந்தின் ஒரு முனையில் பகலாக இருக்கும்போது, இன்னொரு முனையில் இரவாக இருக்கும்... அதை வைத்துதான் புத்தாண்டு பிறந்துவிட்டதாக கணக்கிடப்படுகிறது.. அந்த வகையில், புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடு, கடைசியாக வரவேற்கும் நாடு எவை என்பதை பார்ப்போம்..!

பசிபிக் தீவு
பசிபிக் தீவு நாடுகளான டோங்கா சமோவா, கிரிபாட்டி நாடுகளில் முதன்முதலாக புத்தாண்டு பிறக்கிறது... அதாவது இந்திய நேரப்படி 31-ம்தேதி பிற்பகல் 3.30 மணி என்றால், இவர்களுக்கு சரியாக அதிகாலை 12 மணி ஆகிவிடும்.. புத்தாண்டையும் வரவேற்க தயாராகிவிடுவார்கள்.. உலகிலேயே முதல் முதலாக புத்தாண்டு இவர்களுக்கு பிறப்பதால், எப்போதுமே சற்று ஆடம்பரமாகவே கொண்டாடுவார்கள்.. லேசர் விளக்குள் ஒளிர, வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களை கட்டும்.. இந்திய நேரப்படி 31-ம்தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நியூசிலாந்து புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாகும்.

இந்தியா
அடுத்ததாக இங்கிலாந்து நாட்டில் புத்தாண்டு கொண்டாடப்படும்.. இந்திய நேரப்படி நமக்கு மாலை 5.30 என்றால், இங்கிலாந்திலோ புத்தாண்டுக்கு நேரம் நெருங்கிவிடும்.. அதேபோல, ஜனவரி 1ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் துவங்கும்.. இதில், மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் கடைசி நாடாக இருப்பது பேக்கர் தீவு ஆகும்.. இதைதவிர வேறு எந்தெந்த நாடுகளில் எப்போது புத்தாண்டு பிறக்கும் என்பதை பார்ப்போம்:
- 5:30 pm: ரஷ்யாவின் ஒரு பகுதி
- 6:30 pm: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி, கான்பெரா, ஹோனியாரா
- 7 pm: அடிலைய்டு, புரோக்கன் ஹில், செடுனா
- 7:30 pm: பிரிஸ்பேன், போர்ட் மோர்ஸ்பை, ஹகத்னா
- 8 pm: டார்வின், அலைஸ் ஸ்பிரிங்ஸ், டெனண்ட் கிரீக்
- 8:30 pm: ஜப்பான், தென் கொரியாவின் டோக்யோ, சியோல், பியாங்யாங்க், டிலி, நெருல்மட்
- 9:30 pm: சீனா, பிலிப்பைன்ஸ்
- 10:30 pm: இந்தோனேசியா, தாய்லாந்து
- 11 pm: மியான்மர்
- 11:30 pm: வங்கதேசம்
- 11:45 pm: நேபாளத்தின் காட்மண்ட், பொக்காரா, பிரட் நகர், டாரன்
- 12:00 am: இந்தியா, இலங்கை
- 12:30 am: பாகிஸ்தான்
- 1 am: ஆப்கானிஸ்தான்.
Recommended Video

கடைசி நாடு
இந்திய நேரப்படி சிகாகோவில் காலை 11.30 மணி, யரிஜோனாவில் 12.30 மணி, அலாஸ்கா மதியம் 2.30 மணி, ஹவாலியில் பிறப்கல் 3.30 மணி அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்திய நேரப்படி ஜனவரி 1, காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரை மார்கொயஸாஸ், அமெரிக்கன் சமோவா ஆகிய நாடுகள் புத்தாண்டை கொண்டாடுகின்றன... அதேபோல, ஜனவரி 1, மாலை 5.50 மணிக்கு பேக்கர் தீவு புத்தாண்டை கொண்டாடுகிறது.. இங்குதான் புத்தாண்டு பிறக்கும் கடைசி நாடாகும்.. ஆக, ஒருநாள் முன்னதாக மாலை நேரத்தில் துவங்கும் புத்தாண்டானது, மறுநாள் மாலை வரை ஒவ்வொரு உலக நாடுகளும் கொண்டாடி முடிக்கின்றன..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications