தென்படாத பிறை.. தமிழகத்தில் ஜூலை 29ம் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாட்டம்.. அரசு தலைமை காஜி அறிவிப்பு
சென்னை: பிறை தென்படாத நிலையில் தமிழகத்தில் ஜூலை 29ம் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடுவதற்கான தேதியை அரசு தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் ரம்ஜானுக்கு அடுத்தபடியாக புனித நாளாக மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரம்ஜானை போல் மொஹரம் பண்டிகையும் பிறை பார்க்கும் தேதியை பொறுத்து கொண்டாடப்பட்டு வருகிறது. மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் நாள் முஹர்ரம்-உல்-ஹரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, கடவுளின் தூதராகக் கருதப்பட்ட முஹம்மது நபி, முஹர்ரம் மாதத்தை 'அல்லாஹ்வின் புனித மாதம்' என்று அழைத்தார். 354 அல்லது 355 நாட்களைக் கொண்ட ஹிஜ்ரி நாட்காட்டியின்படி முஹர்ரம் மொஹரம் ஆண்டின் முதல் மாதம் ஆகும்.
இதனால் தான் மொஹரம் பண்டிகையும் இஸ்லாமியர்களின் முக்கிய கொண்டாட்டமாக உள்ளது. இந்நிலையில் தான் மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் நாள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அயூப் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பில், ''துல்ஹஜ் மாதம் 29ம் தேதி (ஜூலை 18) மாலை மொஹரம் மாத பிறை சென்னையிலும் பிற மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் ஜூலை 20-ம் தேதி மொஹரம்மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனால் யொமே ஷஹாதத், ஜூலை 29 ஆகும்'' என தெரிவித்துள்ளார்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications