2024 நாடாளுமன்றத் தேர்தல்! திமுக கூட்டணியில் 1 சீட்! காய் நகர்த்தும் மனிதநேய மக்கள் கட்சி!
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 1 சீட் எதிர்பார்க்கும் மனிதநேய மக்கள் கட்சி.
சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 1 சீட்டாவது வாங்கிவிட வேண்டும் என்பதில் மனிதநேய மக்கள் கட்சி மிக உறுதியாக உள்ளது.
இதனால் அதை நோக்கி காய் நகர்த்தி வரும் மமக, இப்போதே தொகுதியை தேர்வு செய்யும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஏனைய இஸ்லாமிய அமைப்புகளுக்கு மத்தியில் மனிதநேய மக்கள் கட்சி ஓரளவு வலிமையான கட்டமைப்போடும், வாக்கு வங்கியோடும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

திமுக -மமக
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தமிழ்நாடு முழுவதும் முன்பைக் காட்டிலும் இப்போது கட்டமைப்பு பலமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள மற்ற இஸ்லாமிய அமைப்புகளை காட்டிலும் மமகவும், தமுமுகவும் ஓரளவு ஆக்டிவாக இயங்கி வருவது அந்தக் கட்சியின் ப்ளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. இதேபோல் நகர, ஒன்றிய வாரியாகவும் அமைப்புகள் நிறுவப்பட்டு வருகின்றன.

2024 நாடாளுமன்றத் தேர்தல்
இதனிடையே எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு தொகுதியையாவது வாங்கிவிட வேண்டும் என்பதில் ஜவாஹிருல்லா மிக உறுதியாக இருக்கிறார். அதை நோக்கி அவர் காய் நகர்த்த ஆரம்பித்துள்ளார். தற்போது எந்த தொகுதியில் போட்டியிட்டால் சாதகமாக இருக்கும் என்பது பற்றிய முதற்கட்ட சர்வே பணிகளும் தொடங்கப்படவுள்ளன. விரைவில் தொகுதியை தேர்வு செய்து திமுக தலைமையிடம் இது குறித்து மமக தரப்பில் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோட்டில் பலம்
இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவரிடம் நாம் பேசிய போது, ''கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே திமுகவிடம் 1 சீட் கேட்டோம். கடைசி நேர முயற்சியால் அது கைகூடவில்லை. அதனால் இந்த முறை முன்கூட்டியே இது தொடர்பாக திமுகவிடம் கேட்கவிருப்பது உண்மை தான். எங்கள் கட்சியின் பலத்தை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலேயே எல்லா அமைச்சர்களும் பார்த்து தெரிந்து கொண்டனர். அதனால் எங்களுக்கு 1 சீட் தருவதில் திமுக தலைமை தயங்காது'' எனக் கருதுகிறோம் எனக் கூறினார்.

முஸ்லீம் லீக்
இதனிடையே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு இஸ்லாமியக் கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கும் 2 தொகுதிகளை எதிர்பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திமுகவில் உள்ள இஸ்லாமிய பிரமுகர்கள் இதனால் தங்களுக்கு ஏதும் சீட் கிடைக்காமல் போய்விடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications