2025ல் தமிழகத்தில் 24 நாட்கள் பொது விடுமுறை! ஞாயிற்றுக்கிழமை வரும் பண்டிகை நாட்கள் எத்தனை தெரியுமா?
சென்னை: 2024 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2025 ஆம் ஆண்டு தொடங்க இருக்கும் நிலையில் 2025 ஆம் ஆண்டில் அரசு பொது விடுமுறை தினங்கள் குறித்த பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு முதல் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை வரை மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை என அறிவித்திருக்கிறார் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம். இந்நிலையில் ஞாயிறன்று 3 பண்டிகைகள் வருவது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் தொடங்குவதற்கு முன்னதாக அந்த ஆண்டில் வரும் விடுமுறை தினங்கள் முக்கிய பண்டிகைகள் மற்றும் பொது விடுமுறை குறித்து மத்திய அரசும், அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2025ஆம் ஆண்டு தொடங்க இருக்கும் நிலையில் பொது விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் உள்ள வணிகம் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், ஜனவரி ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை வரை 24 நாட்கள் கொண்ட விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளரான முருகானந்தம்.
இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08.06.1957 நாளிட்ட பொது 20-25-26ஆம் எண் அறிவிக்கையின்படி 1881ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் (மத்தியச் சட்டம் XXV/1881) 25-ஆம் அறிவில் விளக்கம் என்பதன் கீழ் பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக் கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2025-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நுட்களாக கருதப்படும் என தமிழ்நாடு அரசு இதனால் அறிவிக்கிறது. இதில் ஒரு நாள் மட்டும் வங்கிகளுக்கான விடுமுறை நாள் என்பதால், பொதுவான விடுமுறை என்பது 23 நாள்கள் உள்ளன.
ஜனவரி 1- ஆங்கில புத்தாண்டு, ஜனவரி 14 - தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 15 - திருவள்ளுவர் தினம், ஜனவரி 16-உழவர் திருநாள், ஜனவரி 26 - குடியரசு தினம், பிப்ரவரி 11 - தைப்பூசம், மார்ச் 30 - தெலுங்கு வருடப் பிறப்பு, மார்ச் 31 - ரம்ஜான் பண்டிகை, ஏப்ரல் 1 - வங்கி ஆண்டு கணக்கு முடிவு, ஏப்ரல் 10 - மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 14 - தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 18 - புனித வெள்ளி, மே 1 - மே தினம்.

ஜூன் 7 - பக்ரீத் பண்டிகை, ஜூலை 6 - மொகரம் பண்டிகை, ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம், ஆகஸ்ட் 16 - கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 27 - விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் 5 - மிலாது நபி, அக்டோபர் 1 - ஆயுத பூஜை, அக்டோபர் 2 - விஜயதசமி, அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி, அக்டோபர் 20 - தீபாவளி பண்டிகை, டிசம்பர் 25 கிறிஸ்துமஸ்" ஆகிய நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2025ஆம் ஆண்டில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஜனவரியில் ஐந்து நாட்கள் பொது விடுமுறையாகவும், ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் நான்கு பொது விடுமுறை நாட்கள் வருகிறது. குடியரசு தினம், தெலுங்கு வருட பிறப்பு, மொகரம் பண்டிகை ஆகிய விடுமுறைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது.












Click it and Unblock the Notifications