'ஸ்ட்ராபெரி நிலவு'.. வானில் நடக்கும் அதிசயம்! பார்க்க ரெடியா? தேதியை நோட் பண்ணிக்கோங்க
சென்னை: இந்த ஆண்டின் 'ஸ்ட்ராபெரி நிலவு' ஜூன் 11ம் தேதி தோன்றும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மற்ற முழு நிலவை விட, இது மிகவும் வித்தியாசமானது என்றும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதை இந்தியாவில் இருந்தும் பார்க்க முடியும். பார்க்க தயாரா?
ஒவ்வொரு ஆண்டும் 'ஸ்ட்ராபெரி நிலவு' தோன்றினாலும், அது ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக தெரியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு தோன்றும் முழு நிலவு மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். காரணம் இது அடிவானத்திலேயே முழுமையான பிரகாசத்துடன் உதிக்க தொடங்கும்.

'ஸ்ட்ராபெரி நிலவு' என்று சொன்னால், நிலவு ஸ்ட்ராபெரி சைஸில் இருக்கும் என்று எண்ண வேண்டாம். இது ஒரு வகையான முழு நிலவாகும். அதேபோல ஸ்ட்ராபெரி நிறத்தில் இருக்கும் என்றும் நினைக்க வேண்டாம். தங்க நிறத்தில் இந்த நிலவு இருக்கும். வசந்த காலத்தின் கடைசி நிலவாக இது பார்க்கப்படுகிறது. இந்த பௌர்ணமி நாளில்தான் அமெரிக்காவில் 'ஸ்ட்ராபெரி' பழங்கள் விளைய தொடங்கும் என்பதால், அமெரிக்க பழங்குடியினரால் இந்த பௌர்ணமிக்கு இப்படி ஒரு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
மற்ற முழு நிலவை காட்டிலும், இது மட்டும் அடிவானத்திலேயே பிரகாசமாக தோன்றுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. ஒப்பீட்டளவில் இந்த பௌர்ணமியின்போது சூரியனிலிருந்து பூமி மிக நீண்ட தூரத்தில் இருக்கும். சூரியனை பூமி சுற்றும் பாதை நீள்வட்டம் என்பதால், குறிப்பிட்ட சில நாட்களில் சூரியனுக்கு அருகிலும், குறிப்பிட்ட சில நாட்களில் சூரியனுக்கு தூரத்திலும் பூமி இருக்கும். இந்த சமயத்தில் பூமி தூரமாக இருப்பதால், நிலவின் தொலைவும் சூரியனிலிருந்து தூரமாக இருக்கும்.
இதனால் நிலவு பூமியின் அடிவானத்திலிருந்து, உதிக்கும்போதே இயல்பான வெளிச்சத்தில் பிரகாசிக்க தொடங்கிவிடும். இந்த முழு நிலவின்போது கர்ப்பிணிகள் வெளியே வரக்கூடாது, உணவு சாப்பிட கூடாது, தண்ணீர் குடிக்க கூடாது என்றெல்லாம் இல்லை. சாதாரணமாக அவரவர் தங்கள் வேலைகளை இயல்பாக செய்யலாம்.
ஆனால் கடலில் சில மாற்றங்கள் நடக்க வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக கடல் அலைகளின் வேகமும், உயரமும் அதிகமாக இருக்கக்கூடும். ஒவ்வொரு முழு நிலவின்போதும் இது சகஜமானதுதான். எனவே அச்சப்பட வேண்டியதில்லை.

'ஸ்ட்ராபெரி நிலவு' 11ம் தேதிதான் உதிக்கும் என்று சொல்லப்பட்டாலும், தமிழ்நாட்டில் ஜூன் 10ம் தேதி இரவு முதலே இதனை பார்க்க முடியும். சென்னையில் இரவு 7.30 முதல் இதனை பார்க்கலாம். இந்த நிலவின் மேல் வலது பக்கத்தில் ஆன்டரஸ் நட்சத்திரம் சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும். வானியல் அதிசயங்களில் இந்த 'ஸ்ட்ராபெரி நிலவு' முக்கியமானதாகும். எனவே தவறவிடாதீர்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications