Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி மிக மோசமாக சறுக்கலை சந்திக்கும் என்று 3 முக்கியமான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது. கூட்டணிக் கணக்குகள், கொள்கைப் பிரகடனங்கள் ஒருபுறம் இருக்க, "யாருக்கு மக்கள் செல்வாக்கு?" என்ற கேள்விக்கு விடை தேடி பல்வேறு நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டு உள்ளன. இதில் 3 முக்கிய நிறுவனங்கள் தவெக மற்றும் அதிமுக படுதோல்வி அடையும் என்று கணித்துள்ளன.

AIADMK and TVK against DMK

'லோக் போல்' (Lok Pol) சர்வே

தமிழக அரசியல் களம் தற்போது 'லோக் போல்' (Lok Pol) அமைப்பின் மெகா சர்வே முடிவுகளால் அதிரத்தொடங்கியிருக்கிறது. அதன்படி, தமிழக சட்டசபை தேர்தலில் மீண்டும் திமுக தான் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது திமுக கூட்டணி 181முதல் 189 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், திமுக கூட்டணிக்கு சுமார் 40.1 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கருத்து கணிப்பால் திமுகவினர் ஹேப்பியாகி உள்ளனர்.

அதேபோல் தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கிய விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 8 முதல் 10 இடங்களில் வெல்லும். தவெகவிற்கு 23.9 சதவீதம் வரையிலான ஓட்டுகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

திமுக கூட்டணிக்கு 181 முதல் 189 இடங்கள் வரை கிடைக்கும் என்கிற கணிப்பு, அறிவாலயத் தரப்பில் 'மெகா ஹேப்பி' ரகம். 40.1% வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலம், கடந்த தேர்தலை விடவும் இந்த முறையும் தனிப்பெரும்பான்மை (Single Majority) என்பது திமுகவிற்கு எட்டாக்கனி அல்ல, எட்டும் தூரம் தான் என்பதை இந்த சர்வே கோடிட்டுக் காட்டுகிறது.

கூட்டணி பலம் ஒருபுறம் இருந்தாலும், 181 இடங்களுக்கு மேல் ஒரு கூட்டணி பிடிப்பது என்பது தமிழக அரசியலில் ஒரு 'கிளின் ஸ்வீப்' (Clean Sweep) நிலையை நோக்கிய நகர்வு. ஆகும். அதாவது திமுக இதில் தனி மெஜாரிட்டியும் பெற வாய்ப்புகள் உள்ளன. 181 என்று வந்தால் - திமுக தனியாக 140 வரை கூட எடுக்க வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் திமுகவிடம் ஆட்சியில் பங்கு என்று யாரும் கேட்க மாட்டார்கள். முக்கியமாக காங்கிரஸ் தலைவர்கள் கேட்க மாட்டார்கள்.

அதிமுக+ (29%): 38 முதல் 42 இடங்கள் என்பது பிரதான எதிர்க்கட்சிக்கு ஒரு சவாலான சூழலே. அதாவது அதிமுக இந்த முறை எதிர்க்கட்சியாக சட்டசபையில் அமர்வதே சிக்கலாக மாற வாய்ப்புகள் உள்ளன. வாக்கு வங்கியில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும், இடங்களின் எண்ணிக்கையில் பலத்த போட்டியைச் சந்திக்கிறது.

தமிழக வெற்றிக் கழகம் (23.9%): அரசியலில் 'என்ட்ரி' கொடுத்த வேகத்திலேயே 8 முதல் 10 இடங்கள் மற்றும் சுமார் 24% வாக்கு வங்கி என்பது தமிழக அரசியலில் ஒரு 'புதிய துருவத்தின்' உதயத்தைக் காட்டுகிறது. இது மற்ற பெரிய கட்சிகளின் வாக்கு வங்கியில் கை வைத்துள்ளதா என்கிற விவாதத்தை கிளப்பியுள்ளது. ஆனால் இவ்வளவு சதவிகிதம் எடுத்தும் 10 இடங்களுக்கு கீழ் எடுப்பது விஜய்க்கு சிக்கலாகலாம்.

அக்னி நியூஸ் சர்வீஸ்

இன்னொரு பக்கம் அக்னி நியூஸ் சர்வீஸ் (Agni News Services) ஒரு மெகா சர்வேயை நடத்தியிருக்கிறது. அந்தப் புள்ளிவிவரங்கள் ஆளுங்கட்சிக்கு உற்சாகத்தையும், எதிர்க்கட்சிகளுக்கு யோசனையையும் கொடுத்திருக்கின்றன.

மண்டலங்களை வாரிச் சுருட்டும் தி.மு.க கூட்டணி!

அக்னி நியூஸ் கணிப்பின்படி, தமிழகத்தின் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், தி.மு.க கூட்டணி 180 இடங்களில் முன்னிலை பெற்று அசுர பலத்துடன் ஆட்சியைத் தக்கவைக்கும் எனக் கூறப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க கூட்டணி 54 இடங்களில் மட்டுமே முன்னிலை பெறுகிறது.

மண்டல வாரியாகப் பார்த்தால், தி.மு.க-வின் கோட்டையாகத் திகழும் சென்னை மண்டலத்தில் மொத்தமுள்ள 37 இடங்களில் 36-ஐ தி.மு.க தட்டிச் செல்கிறது. அ.தி.மு.க-விற்கு இங்கு வெறும் ஒரு இடம் மட்டுமே மிஞ்சுகிறது. அதேபோல், மத்திய மண்டலத்திலும் 37-ல் 35 இடங்களை தி.மு.க கைப்பற்றி தன் பிடியை வலுவாக்கியுள்ளது.

கொங்கு மண்டலம் (மேற்கு) மற்றும் வடக்கு மண்டலங்களில் அ.தி.மு.க ஓரளவுக்குப் போட்டி கொடுத்தாலும், அங்கும் தி.மு.க-வே முதலிடம் வகிக்கிறது. மேற்கு மண்டலத்தில் 50 இடங்களில் 32-ஐ தி.மு.க-வும், 18-ஐ அ.தி.மு.க-வும் பெறுகின்றன. வடக்கு மண்டலத்தில் 52 இடங்களில் 35-ஐ தி.மு.க-வும், 17-ஐ அ.தி.மு.க-வும் தட்டிச் செல்கின்றன. தென் மண்டலத்தைப் பொறுத்தவரை 58 தொகுதிகளில் தி.மு.க 42 இடங்களிலும், அ.தி.மு.க 16 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

வாக்கு சதவீதப் பங்கீட்டில் தி.மு.க கூட்டணி 44.9% பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. அ.தி.மு.க கூட்டணி 38.5% வாக்குகளைப் பெற்றுள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், புதிதாகக் களம் கண்டுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 9.7% வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

தவெக-வின் தாக்கம்: சென்னை மண்டலத்தில் தவெக அதிகபட்சமாக 10.9% வாக்குகளையும், மேற்கு மண்டலத்தில் 10.7% வாக்குகளையும் பெற்றுள்ளது. இது திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியில் ஒரு சிறிய சலனத்தை மட்டுமே ஏற்படுத்தியிருப்பதை உறுதி செய்கிறது.

போல் டிராக்கர்

2026 சட்டசபை தேர்தலில் முதல் தேர்தலிலேயே தமிழக வெற்றிக் கழகம் 6 முதல் 12 இடங்களைப் பிடிக்கும் என்றும், 19.2% வாக்குகளைப் பெறும் என்றும் என்று போல் டிராக்கர் (Poll Tracker) கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கணிப்பின்படி, ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஒரு பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்யும் எனக் கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், திமுக கூட்டணி 172 முதல் 178 இடங்களைக் கைப்பற்றி அரியணையைத் தக்கவைக்கும் என்கிறது இந்த ரிப்போர்ட். 42.7 சதவீத வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொண்டு, அசைக்க முடியாத சக்தியாக திமுக உருவெடுத்துள்ளது அண்ணா அறிவாலய உடன்பிறப்புகளை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தக் கணிப்பின் மிகவும் உற்றுநோக்கப்பட வேண்டிய அம்சம், நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (TVK). முதல் தேர்தலைச் சந்திக்கும் தமிழக வெற்றிக் கழகம், 19.2 சதவீத வாக்குகளை அள்ளும் என்று சொல்லப்பட்டாலும், இடங்களைப் பொறுத்தவரை வெறும் 6 முதல் 12 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

அரசியல் களத்தில் 'மூன்றாவது முனை' அல்லது 'மாற்று' என எதிர்பார்க்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம், பிரதானப் போட்டியில் (Main Picture) திமுக அல்லது அதிமுகவுக்கு நிகரான ஒரு சவாலை இன்னும் எட்டவில்லை என்பதையே இது காட்டுகிறது. வாக்கு சதவீதம் இரட்டை இலக்கத்தில் இருந்தாலும், அது வெற்றியாக மாறாமல் சிதறுவது அக்கட்சிக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

அதிமுக: 30.3 சதவீத வாக்குகளுடன் 46 முதல் 52 இடங்களைக் கைப்பற்றி வலுவான எதிர்க்கட்சியாக நீடிக்கும் எனத் தெரிகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு இது ஒரு சவாலான காலகட்டமாகவே இருக்கும்.

நாம் தமிழர் கட்சி: சீமானின் நாம் தமிழர் கட்சி 5.1 சதவீத வாக்குகளைப் பெற்றாலும், 0 முதல் 2 இடங்கள் வரை மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கணிப்பு கூறுகிறது.

மற்றவர்கள்: இதர கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 2.8 சதவீத வாக்குகளைப் பெற்றாலும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என இந்த சர்வே 'பஞ்ச்' வைக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+