திமுக 178.. அதிமுக 56, தவெக 0.. மீண்டும் ஆட்சியமைக்கும் ஸ்டாலின்?.. AGNI கருத்துக்கணிப்பு ரிசல்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் திமுகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அக்னி நியூஸ் சர்வீசஸ் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 178 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்றும், அதிமுக கூட்டணி 56 இடங்களைப் பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள்டம் மேற்கொள்ளப்பட்ட அக்னி நியூஸ் சர்வீசஸ் (Agni News Services) புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

2026 TN Election Opinion Poll DMK Alliance Ahead with 178 Seats AIADMK at 56

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிக்க திமுகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க அதிமுகவும் தயாராகி வருகின்றன. விஜய் தலைமையிலான தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் களத்தில் வலுவான போட்டியைக் கொடுக்கும் முனைப்பில் உள்ளன. வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெறுகிறது.

தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில், அக்னி நியூஸ் சர்வீசஸ் நிறுவனம், தேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தி, அதன் முடிவை வெளியிட்டுள்ளது. இதில் எந்தக் கட்சி ஆட்சியை பிடிக்கும், எந்தக் கட்சிக்கு எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெறும், எந்தக் கட்சிக்கு எத்தனை சதவீத ஆதரவு உள்ளது என பல கோணங்களிலும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 2026 சட்டசபை தேர்தலில் திமுகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அக்னி நியூஸ் சர்வீசஸ் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 178 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்றும், அதிமுக கூட்டணி 56 இடங்களைப் பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தவெக உள்ளிட்ட மற்ற கட்சிகள் 1 சீட் கூட வெல்ல வாய்ப்பில்லை என இந்தக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரையில், திமுக, 45.4 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும், அதிமுக 35.3% வாக்குகளைப் பெறும் என்றும், தவெக 11.5% வாக்குகளைப் பெறும் என்றும், நாம் தமிழர் கட்சி 5.6% வாக்குகளைப் பெறும் எனவும் அக்னி நியூஸ் சர்வீசஸ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 TN Election Opinion Poll DMK Alliance Ahead with 178 Seats AIADMK at 56

மண்டல வாரியான தரவுகளைப் பார்க்கும்போது, சென்னை மண்டலத்தில் உள்ள 37 தொகுதிகளில் 36 இடங்களைக் கைப்பற்றி திமுக கூட்டணி அசுர பலத்துடன் உள்ளது. இங்கு அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. மத்திய மண்டலத்தில் 37-இல் 35 இடங்களையும், தென் மண்டலத்தில் 58-இல் 42 இடங்களையும் திமுக கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான தரவுகளின்படி, சென்னை (16), திருவள்ளூர் (10), திருச்சி (9), தஞ்சாவூர் (8), மற்றும் காஞ்சிபுரம் (4) போன்ற மாவட்டங்களில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் வென்று முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீலகிரி, கரூர், பெரம்பலூர், திருவாரூர், ராமநாதபுரம், அரியலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் திமுக கூட்டணி 100% இடங்களைக் கைப்பற்றும் என இந்தக் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+