தமிழ்நாடு முழுவதும் ​2,036 காவலர்கள் பணியிட மாற்றம்.. டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி ஆணை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ​2,036 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சொந்த விருப்பத்தின் அடிப்படையில் காவலர்களை இடமாற்றம் செய்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டவர்களை 15 நாட்களுக்குள் விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு பல்வேறு துறைகளிலும் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். அந்தவகையில் காவல்துறையிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. தமிழக காவல்துறை டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார்.

police transfer

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும், டிரான்ஸ்பர் கேட்டிருந்த காவலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கி டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். சொந்த விருப்பத்தின் அடிப்படையில் 2,036 காவலர்களை இடமாற்றம் செய்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

இடமாற்றம் செய்யப்பட்டவர்களை 15 நாட்களுக்குள் விடுவிக்கவும் டிஜிபி ஆணையிட்டுள்ளார். இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக் கோரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+