நேபாளத்தில் 219 தமிழர்கள் பாதுகாப்பு.. 100 பேர் மாயம்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிர்ச்சி தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேபாளத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 700 மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 2,500 மக்களின் நிலை குறித்து தெரியவில்லை. நூற்றுக்கணக்கான தமிழர்களும் நேபாளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியை ஒருங்கிணைப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரிகள் குழு நேபாளம் சென்றுள்ளனர். அமைச்சர்கள் குழுவினர் டெல்லி சென்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இருந்து 319 பேர் நேபாளம் சென்றனர். அவர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர். 100 பேர் நிலை தெரியவில்லை என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நேபாளம் பேரிடர் தொடர்பாக. சட்டமன்றத்தில் விரிவான அறிக்கை சமர்ப்பித்தோம். அமைச்சர் குழு டெல்லி விரைந்தோம். டெல்லி தமிழக இல்லத்தில் ஒரு வார் ரூம் தயார் செய்தோம். அதை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக பல்வேறு நடவடிக்கை எடுத்தோம். வெளியுறவுத்துறை செயலாளர் சந்தித்தோம்.

Nepal

100 பேர் மாயம்

நேபாள அரசு, மத்திய அரசிடம் பேசினோம். தமிழகத்தில் இருந்து பல்வேறு குழுக்களாக 319 பேர் நேபாளம் சென்றுள்ளனர். இவர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர். இவர்கள் 31 ஆம் தேதி நள்ளிரவுக்குள் சென்னை வந்துவிடுவார்கள். 100 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் மாயமாகிவிட்டனர். இது சர்வதேச பேரழிவு. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து பல நூறு கி.மீ தள்ளி அவர்களின் உடைமைகள் கிடைக்கின்றன.

இரண்டு நாடுகளின் ராணுவம், பேரிடர் குழுவினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்டமாக 21 பேர் காத்மண்டுவில் இருந்து டெல்லி வந்தனர். அவர்களுக்கான உணவு உள்ளிட்ட ஏற்பாடு செய்து பாதுகாத்து சென்னை வரவழைத்தோம். கும்பகோணத்தில் இருந்து 57 பேர் குழு நேபாளம் சென்றுள்ளனர். அவர்களில் 21 பேரையும் சென்னை அழைத்து வந்துள்ளோம். மீதமுள்ள 36 பேரை கண்டறிவதற்கான பணி தொடர்ந்து நடக்கிறது.

மீட்பு பணி

ஆத்ம யோக மையத்தில் இருந்து 150 பேர் நேபாளம் சென்றுள்ளனர். அவர்கள் சீனா பார்டர் சென்று அங்கிருந்து காத்மண்டு சென்று பல்வேறு விமானங்கள் மூலம் வந்து கொண்டே இருக்கிறார்கள். ஐடியல் டூர்ஸ் அண்ட் டிரக்கிங் மூலம் சென்ற 39 பேர் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களில் 33 பேர் 31 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு கோவை விமான நிலையம் வருவார்கள். மீதமுள்ளவர்கள் அன்றைய தினம் மாலை சென்னை வருவார்கள்.

மற்றொரு குழுவை சேர்ந்த 5 பேர் தரைமார்க்கமாக உத்தரபிரதேசம் கடந்து வருகிறார்கள். மகாதேவி யாத்ரா மூலம் சென்ற 49 பேரை கண்டறிய முடியவில்லை. முயற்சிகளை தீவிரப்படுத்தியும் அவர்கள் நிலை தெரியவில்லை. கன்ட்ரோல் ரூமில் ஒரு பட்டியல் உள்ளது. அதில் 15 பேர் காணவில்லை. இது இக்கட்டான நேரம். குடும்பத்தினரின் வலியை அறிவோம்.அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

நம்பிக்கையுடன்

நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து முயற்சி செய்வது அவசியம். பல வகைகளில் அவர்களை மீட்க முயற்சித்து வருகிறோம். மீட்பு பணி நடக்கிறது. நம்முடைய அயலக அமைச்சர் தென்னரசு டெல்லியில் இருந்து மீட்பு பணியை தொடர்ந்து கண்காணிப்பார். டெல்லி பிரதிநிதி வெங்கட நாராயணவும் மீட்பு பணியில் தங்கி பணி செய்கிறார். நோபளம் அரசாக அடையாளம் கண்டு அறிவிக்கும் வரை தவறான எண்ணத்துக்கு செல்ல வேண்டியதில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+