ஆண் நண்பருடன் மகளின் வீடியோ.. அதிர்ந்த அப்பா, அண்ணன் செய்த காரியம்.. பாவம் அந்த 22 வயது பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆண் நண்பருடன் சேர்ந்து 22 வயது மகள் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அந்த வீடியோ வைரலாகிவிட்டது.. உடனே வீட்டில் பிரச்சினை வெடித்தது.. காதலனுடன் பேசக்கூடாது என்று கட்டுப்பாடுகள் போடப்பட்டன.. ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே நடந்த சம்பவம், மிகப்பெரிய அதிர்வலையை குஜராத்தில் ஏற்படுத்தி உள்ளது.. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்கேஜ் பகுதியைச் சேர்ந்தவர் சோபியா பரூக்.. 22 வயதாகிறது.. தனியார் மருத்துவமனை ஒன்றில் ரிசப்ஷனிஸ்ட்டாக வேலை பார்த்து வருகிறார்..

Ahmedabad woman

ஆண் நண்பருடன் ரீல்ஸ் வீடியோ

சுமார் 3 மாதங்களுக்கு முன்பு தனது ஆண் நண்பருடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை சோபியா சோஷியல் மீடியாவில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ எதிர்பாராதவிதமாக வைரலானது. இதுதான் குடும்பத்துக்குள் அடுத்தடுத்த பிரச்சினைகளுக்கு காரணமாக மாறியிருக்கிறது.

அந்த வீடியோ வைரலானதுமே, சோஃபியாவிடம் அவரது அப்பா மொகமத் பரூக் சண்டையிட்டுள்ளார். இனிமேல் தான் ஆண் நண்பரிடம் பேசக்கூடாது, ஒன்றாக சேர்ந்து வீடியோ பதிவிடக்கூடாது என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. அத்துடன் நிற்கவில்லை, சோபியாவின் அண்ணன் ஹபில் பரூக்கும், அந்த ஆண் நண்பரை கூப்பிட்டு எச்சரித்துள்ளார்,.. ஆண்களிடமே பேசக்கூடாது என்று தங்கை சோபியாவுக்கும் கண்டிஷன்களை விதித்துள்ளார்.

அப்பா, அண்ணன் செய்த காரியம்

சோபியாவை இப்படி பல வழிகளில் கண்டித்தனர்.. அப்போதும்கூட, சோபியா மீது குடும்பத்தினருக்கு சந்தேகம் மட்டும் குறையவில்லை. சோபியா எப்படியும் தங்களுடைய பேச்சை கேட்க மாட்டார், மீண்டும் ஆண் நண்பருடன் சேர்ந்து வீடியோ போட்டுவிடுவார் என்று சந்தேகப்பட்டு கொண்டேயிருந்துள்ளனர்.. இதனால் குடும்பத்துக்கு கெட்ட பெயர் வந்துவிடுமோ என்றும் பயந்துள்ளனர்.. அதனால் சோபியாவின் அப்பாவும், அண்ணனும் சேர்ந்து சோபியாவை கொன்றுவிடுவது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

அதன்படி, சோபியாவை 2 பேரும் தனியாக கெல்ஜிபுரா என்ற இடத்துக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.. அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றதும், ஹபில் மறைத்து வைத்திருந்த இரும்பு சுத்தியலை எடுத்து, சோபியாவின் தலையின் பின்புறத்தில் பலமாக ஓங்கி அடித்துள்ளார்..

பாவம் 22 வயது சோபியா

இதில் சோபியா மயங்கி கீழே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.. உடனே தந்தையும், மகனும் அங்கேயே சோபியாவை தூக்கிச் சென்று நடுரோட்டில் போட்டு விபத்து போல சித்தரித்துள்ளனர்.. பிறகு போலீசாரிடம், சோபியா டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பின்புறமாக மோதி விட்டு தப்பி சென்றதாக நாடகமாடியிருக்கிறார்கள்..

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சோபியாவை மீட்டுள்ளனர்.. அவரது தலை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் இருந்தன. போலீஸார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள் சோபியா பரிதாபமாக இறந்துவிட்டார். எனவே போலீசார் சாலை விபத்து மரணம் என்றே வழக்கு பதிவு செய்து, இந்த விபத்து குறித்து விசாரணையை மேற்கொண்டனர்.

ஒரே ஒரு வீடியோவால் பரிதாபம்

சோபியா எப்போது, எங்கே டூவீலிரில் கிளம்பி சென்றார் என்று குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான், தந்தையும், மகனும் மாறி மாறி உளறி கொட்டி, போலீசாருக்கே சந்தேகத்தை வரவழைத்து விட்டனர்.. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சோபியா விபத்தில் உயிரிழக்கவில்லை.. திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

குடும்பத்தின் கவுரவத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், அப்பாவும், அண்ணனும் சகோதரரும் சேர்ந்து இந்த கொலையை செய்ததும் அம்பலமானது.. இதையடுத்து மொகமத் பரூக் மற்றும் ஹபில் பரூக் ஆகிய 2 பேரையிம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

ரீல்ஸ் வீடியோக்களை எடுக்கும் முயற்சியின்போது எத்தனையோ பேர் எதிர்பாராத விதமாக உயிரிழந்து விடுகிறார்கள்.. ஆனால், வைரலான ஒரேயொரு ரீல்ஸ் வீடியோவால் தொடங்கிய குடும்பத் தகராறு, கடைசியில் ஒரு இளம்பெண்ணின் உயிரையே பறித்துவிட்டது அதிர்ச்சியை தந்து வருகிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+