தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்.. தகவல் மையங்கள் அமைக்கப்பட்டு உதவி எண்கள் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து மண்டல பூஜைக்காக சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்தாண்டு ஜனவரி 20 ஆம் தேதி வரை இந்த தகவல் மையங்கள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறந்து சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இத்தகைய சிறப்பு வாய்ந்த மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை கோவில் நடை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். அதனை தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

கார்த்திகை 1 ஆம் தேதியான நாளை (செவ்வாய்க்கிழமை) முதல், அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை, வழிபாடு நடைபெறும். கோவில் தந்திரி கண்டரரு பிரம்மதத் தன் முன்னிலையில் புதிய மேல்சாந்தி சுப்பிரமணியன் சங்கரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜையை நடத்துவார்.
கோவிலில் நடப்பு சீசனையொட்டி டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெறும். சீசன் தொடக்கம் முதல் தினமும் 18 மணி நேர தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சீசனில் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக இதுவரை 50 லட்சம் டின் அரவணை பிரசாதம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு செல்வதற்காக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மண்டல பூஜைக்காக சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்தாண்டு ஜனவரி 20ம் தேதி வரை இந்த தகவல் மையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா (ஐயப்பன்) திருக்கோயிலில் மண்டல பூஜை 17.11.2026 முதல் 27.12.2026 வரையும், மகரவிளக்கு ஜோதி திருவிழா 30.12.2026 முதல் 19.01.2027 வரையும் நடைபெறுவதை முன்னிட்டு சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திலும், மாநில எல்லையான களியக்காவிளையிலும், கேரள மாநிலம்-சபரிமலையிலும் 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகவல் மையங்கள் 20.01.2027 வரை செயல்படும்.
சென்னை ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், களியக்காவிளை தகவல் மையத்தினை 9894433179, 8760668834,9486270443 ஆகிய எண்களிலும், சபரிமலையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை கீழ்க்காணும் அலுவலர்களின் கைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
இத்தகவல் மையங்களின் சேவையினை தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.




Click it and Unblock the Notifications
