ஹிஜாப் விவகாரம்: உளவுத் துறை ரிப்போர்ட்! காஞ்சி சங்கர மடம், மற்ற கோயில்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹிஜாப் விவகாரத்தால் காஞ்சி சங்கர மடம், முக்கிய கோயில்களுக்கு அச்சுறுத்தல் நிலவி வருவதால் 24 மணி நேர பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் தொடர்ந்து 6 நாட்கள் ஹிஜாப்பிற்கு அனுமதி கோரி முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இருப்பினும் ஹிஜாப் விவகாரம் தொடர்பான சர்ச்சைகள் முழுமையாக இன்னும் நீங்கவில்லை.

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து கொண்டு தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படாததால் சிறுமி ஒருவர் தேர்வே வேண்டாம் என கூறி வீட்டுக்குச் சென்றார். முஸ்லீம் மாணவிகளுக்கு ஹிஜாப் அணிய அனுமதி கொடுத்தால் காவி துண்டு அணிய இந்து மாணவர்களுக்கு அனுமதிக் கொடுக்க வேண்டும் என ஹிந்துத்துவா மாணவர்கள் மல்லுக்கட்டி வருகிறார்கள்.

ஹிஜாப் பிரச்சினை

ஹிஜாப் பிரச்சினை

கர்நாடகாவை தொடர்ந்து இன்னும் பிற மாநிலங்களில் ஹிஜாப் பிரச்சினை தலைத்தூக்கியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற தேர்தலின் போது ஹிஜாப் அணிந்து வந்த பெண் வாக்காளருக்கு பாஜக முகவர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். ஹிஜாப் குறித்து வெளிநாடுகளும் கருத்து சொல்ல தொடங்கிவிட்டன.

ஹிஜாப் விவகாரம்

ஹிஜாப் விவகாரம்

இந்த நிலையில் ஹிஜாப் விவகாரத்தால் பிரச்சினைகள் தலைதூக்காமல் இருக்க முக்கியமான கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரத்தில் உள்ள காஞ்சி சங்கர மடத்திற்கு 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர் கண்காணிப்பு

தொடர் கண்காணிப்பு

அதேபோல் கல்லூரிகளில் ஏதேனும் மாணவர்கள் இடையே பிரச்னை வராமல் இருக்க போலீஸார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். காஞ்சிபுரத்தில் உள்ள முஸ்லீம் அமைப்புகளால் சங்கரமடத்திற்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடும் என உளவுத்துறை கண்காணித்து எச்சரித்தது.

சங்கர மடத்திற்கு பாதுகாப்பு

சங்கர மடத்திற்கு பாதுகாப்பு

இதைத் தொடர்ந்து போலீசார் சுழற்சி முறையில் சங்கர மடத்திற்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். இதேபோல் தமிழகத்தின் முக்கியமான சில கோவில்களுக்கும் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர் என கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+