24 டூ 26.. டிஆர்பி + தங்கம்! அமைச்சரவை மாற்றத்தில் ஸ்டாலினின் அறுவடை வியூகம்.. ஸ்கெட்ச் எடப்பாடிக்கு
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் இன்று செய்யப்பட்டு உள்ளன. இந்த மாற்றத்திற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
2024 லோக்சபா தேர்தல், 2026 சட்டசபை தேர்தல் இரண்டையும் மனதில் வைத்தே முதல்வர் ஸ்டாலின் இந்த மாற்றங்களை செய்து உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு ஜாதி ரீதியாகவும் சில அதிரடி வியூகங்களை முதல்வர் ஸ்டாலின் வகுத்து இருக்கிறாராம். முக்கியமாக டெல்டா தென் மாவட்டங்களை குறி வைத்து ஸ்டாலின் இந்த மாற்றத்தை செய்து இருக்கிறாராம்.
தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்துள்ளார்.
மேலும் ஐடி துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.
லோக்சபா தேர்தல் - சட்டசபை தேர்தல்: 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராக திமுக தீவிரம் காட்டி வருகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு நிர்வாகிகள் மாற்றப்பட்டு உள்ளனர். இதையடுத்து தற்போது அமைச்சர்களின் பர்பார்மன்ஸ் அடிப்படையில், அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதாவது அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

சாதி - எடப்பாடி : அதே சமயம் தற்போது தங்கம் தென்னரசுவிற்கு நிதித்துறை என்ற முக்கிய துறை வழங்கப்பட்டு உள்ளது.
டிஆர்பி ராஜாவிற்கு தொழில்துறை வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் இருவருமே முக்குலத்தோர் பிரிவை சேர்ந்தவர்கள். இது போக அன்பில் மகேஷ் பொய்யாமொழி உட்பட கள்ளர் பிரிவை சேர்ந்த 3 பெரிய அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரையும் சேர்த்து முக்குலத்தோர் பிரிவை சேர்ந்த அமைச்சர்கள் 5 பேர் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.
இதன் மூலம் ஜாதி ரீதியாகவும் எடப்பாடிக்கு ஸ்டாலின் செக் வைத்துள்ளார். முக்குலத்தோர் ஆதரவு எடப்பாடிக்கு இல்லாத நிலையில், அவர்களை மொத்தமாக திமுக பக்கம் ஸ்டாலின் கொண்டு வர இந்த பிளானை இறக்கி உள்ளாரோ என்று கருதப்படுகிறது.
2024, 2026 தேர்தல்களில் மொத்தமாக முக்குலத்தோர் வாக்குகளை அள்ள, தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் எடப்பாடியை ஒடுக்குவதற்கான ஸ்டாலினின் திட்டமாக இது பார்க்கப்படுகிறது. எடப்பாடி மீது முக்குலத்தோருக்கு ஏற்கனவே உள்ள அதிருப்தியை ஸ்டாலின் அறுவடை செய்ய முடிவு எடுத்துவிட்டாரோ என்று தோன்றுகிறது.

ஏற்கனவே கொங்கு மண்டலத்திலும் திமுகவிற்கு செந்தில் பாலாஜி காரணமாக நல்ல வரவேற்பு உள்ளது.
கொங்கு வேளாள கவுண்டர்கள் 4 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.
1.சக்கரபாணி , உணவுத்துறை.
2.சு.முத்துசாமி,
வீட்டு வசதித்துறை.
3.வெள்ளக்கோவில் சாமிநாதன் , தமிழ் வளர்ச்சித்துறை.
4.செந்தில்பாலாஜி , மின்சாரத்துறை.
ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் ஸ்டாலினின் இந்த திட்டமிட்ட வியூகம் எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுக்கும் திட்டமாக பார்க்கப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications