உள்ளாடைக்குள் மினி உள்ளாடை.. உள்ளே 8 கோடி தங்கம்.. அதிர வைத்த 2 பெண்கள்

24 கிலோ தங்கத்தை கடத்தியதாக 2 பெண்கள் சென்னை ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2 பெண்கள் தங்கள் உள்ளாடைக்குள் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி சென்றதை அறிந்ததும் சென்னை ஏர்போர்ட்டே கதிகலங்கி போய்விட்டது.

ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு 1.30 மணிக்கு விமானம் ஒன்று வந்தது. வழக்கம்போல் பயணிகளை சுங்க அதிகாரிகள் கண்காணித்தபடியே இருந்தனர். அப்போது 2 கொரிய பெண்கள் டிப்-டாப் டிரஸ் அணிந்து வந்தனர். ரெண்டு பேரின் டிரஸ்களும் ஒரே மாதிரி இருந்தது.

எல்லோரும் ஒரு பாதையில் வந்தால் இவர்கள் ரெண்டு பேர் மட்டும் தனி வழியில் சென்றார்கள். அதுவும் இல்லாமல் அவர்களின் நடவடிக்கைகளும் சந்தேகமாகவே இருந்ததால், அதிகாரிகள் அவர்களை அழைத்து கொண்டு வந்த சூட்கேஸ்களை சோதனை செய்தார்கள்.

சந்தேகம் வலுத்தது

சந்தேகம் வலுத்தது

அதில் அவர்கள் டிரஸ் தவிர வேறு எதுவுமே இல்லை என்பதால், கிளம்பி போகும்படி சொன்னார்கள். அவர்களும் பெட்டியை எடுத்து கொண்டு போகும்போது திரும்பவும் அதிகாரிகளுக்கு சந்தேகமாகவே இருந்தது. அதனால் பெண் அதிகாரிகளை கூப்பிட்டு அவர்களிடம் தனி ரூமில் ஆடைகளை களைந்து சோதனை செய்ய சொன்னார்கள்.

உள்ளாடைக்குள் உள்ளாடை

உள்ளாடைக்குள் உள்ளாடை

அதன்படியே ஒரு ரூமுக்குள் அந்த 2 பெண்களிடம் சோதனை நடத்தப்பட்டதில், உள்ளாடைக்குள் ஒரு உள்ளாடை இருந்தது. அதாவது ஸ்கர்ட் போன்று உள்ளாடைக்குள் அணிந்திருந்தார்கள். அந்த ஆடைக்குள் குட்டி, குட்டியாக பைகள் தைக்கப்பட்டு, அந்த பைகளுக்குள் தங்க கட்டிகளை வைத்திருந்தார்கள்.

வாய் திறக்கவில்லை

வாய் திறக்கவில்லை

உள் ஆடைக்குள் 2 பெண்களும் ஆளுக்கு 12 கிலோ என 24 கிலோ தங்க கட்டிகளை வைத்திருந்தார்கள். அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, ஹாங்காங்கில் இந்த தங்ககட்டிகளை தந்தது யார் என்று துருவி துருவி நடத்தியதில் சர்வதேச அளவில் தங்கம் கடத்தும் கும்பலுடன் இந்த பெண்கள் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. ஆனால் முழு விவரத்தை இருவருமே வாய் திறந்து இன்னும் சொல்லவில்லை. இருந்தாலும் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

8.5 கோடி ரூபாய்

8.5 கோடி ரூபாய்

இதுபோல பலமுறை இப்படித்தான் உள்ளாடைக்குள் தங்கத்தை கடத்தி வருகிறார்களாம். எல்லா ஏர்போர்ட்களிலும் ஸ்கேனர் உள்ளபோது, இவர்கள் எப்படி இவ்வளவு காலமாக கடத்தி வந்திருப்பார்கள், எப்படி மாட்டாமல் தப்பித்து வந்திருப்பார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. 24 கிலோ அதாவது ரூ. 8.5 கோடி மதிப்புள்ள தங்கத்தை மினி உள் ஆடைக்குள் அசால்ட்டாக கடத்தி வந்த இந்த இரு கொரிய பெண்களின் நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+