ராத்திரி 10 மணி வரை மழை கொட்டப்போகுது.. சென்னை, மதுரை உள்பட 27 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!
சென்னை: அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது இரவு 10 மணி வரை தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, சேலம், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, இன்று மாலை முதல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும், பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதேபோல, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-
வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை.. 12 மாவட்டங்களில் இன்று பிச்சு உதறப் போகுது கனமழை.. வானிலை அலர்ட் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது கனமழை.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications