வாகன ஓட்டிகளுக்கு ஷாக்.. பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அளவை.. 27% ஆக உயர்த்த திட்டம்? போச்சு
சென்னை: பெட்ரோலுடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவை தற்போதைய 20 சதவீதத்தில் இருந்து மேலும் அதிகரிக்கவும், இதில் உடனே புதிய கொள்கைகளை கொண்டு வரவும் வேண்டும் என்று எத்தனால் உற்பத்தி மையங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
எத்தனால் உற்பத்தியாளர்கள், 2025-26 ஆம் நிதியாண்டுக்கான (ESY) 10,500 மில்லியன் லிட்டர் தேவைக்கு பதிலாக 17,760 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான எத்தனாலை உற்பத்தி செய்துள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு இதை விற்க முடியாமல் எத்தனால் நிறுவனங்கள் கஷ்டப்பட்டு வருகின்றன.

கரும்பு அடிப்படையிலான அலகுகளில் இருந்து 4,710 மில்லியன் லிட்டருக்கும் அதிகமாகவும், தானிய அடிப்படையிலான எத்தனால் உற்பத்தியாளர்களிடம் இருந்து 13,040 மில்லியன் லிட்டருக்கும் அதிகமாகவும் எத்தனால் வழங்க முன்வந்துள்ளனர். ஆனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு இதை விற்க முடியாமல் எத்தனால் நிறுவனங்கள் கஷ்டப்பட்டு வருகின்றன.
அரசுக்கு எத்தனால் நிறுவனங்கள் வைக்கும் கோரிக்கை
எத்தனால் தொழிலில் இதுவரை சுமார் ₹40,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் இன்னும் பெரிய அளவில் ரிட்டர்ன் கிடைக்கவில்லை. பிரேசிலைப் போலவே எத்தனால் கலவையை 27% ஆக அதிகரிக்க வேண்டும் என்றும், இதன் மூலம் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட உற்பத்தித் திறனை முழுமையாகப் பயன்படுத்த முடியும் என்று அந்த நிறுவனங்கள் கோரிக்கை விடுக்கின்றன.
அரசாங்கம் தனது எத்தனால் கலப்பு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும், 20% கலப்பு என்ற இலக்கை எட்டியுள்ள நிலையில், 100% எத்தனாலில் இயங்கும் ஃப்ளெக்ஸ் எரிபொருள் வாகனங்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அந்த நிறுவனங்கள் குறிப்பிட்டு உள்ளன.
உற்பத்தி அதிகம் - கொள்முதல் குறைவு
எத்தனால் கலப்புத் திட்டம் 2024-25 நிதியாண்டில் ₹40,000 கோடி அந்நியச் செலாவணியைச் சேமிக்க உதவியுள்ளது. தற்போது, இத்துறை ஆண்டுக்கு 17,000 மில்லியன் லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் 11,000 முதல் 12,000 மில்லியன் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்கின்றன.
எத்தனால் அளவை உயர்த்த திட்டம்
பெட்ரோலில் எத்தனால் கலப்பதைப் 27% ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதையும், கார்பன் உமிழ்வைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
20% எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வாகன உரிமையாளர்கள் மத்தியில் பல்வேறு கவலைகள் எழுந்துள்ளன. எரிபொருள் செலவு அதிகரிப்பது, வாகனத்தின் செயல்திறன் மந்தமாவது, பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பது போன்ற புகார்களைப் பலர் தெரிவிக்கின்றனர்.
முக்கியமாக பலரும் மைலேஜ் குறைந்துவிட்டது.. வண்டி திடீர் என்று பவர் இல்லாமல் குறைந்துவிட்டது என்று விமர்சனங்கள் வைக்கின்றனர். பெரும்பாலான இந்திய சாலைகளில் ஓடும் வாகனங்கள் இன்னும் E20 ஏற்றவை அல்ல என்பதால், சேவை மையங்கள் இயந்திர தேய்மானம் மற்றும் கேஸ்கெட் செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதாகக் கூறுகின்றன.
இப்படிப்பட்ட நிலையில் இந்தியா எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பசுமையான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில், பெட்ரோலில் 27% எத்தனால் கலப்பதை (E27) அறிமுகப்படுத்த அரசு முன்மொழிந்துள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் 30% கலப்பு என்ற இலக்கை நோக்கிய ஒரு படியாக இது கருதப்படுகிறது. எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் (EBP) திட்டத்தின் குறிப்பிடத்தக்க வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 வருடங்களுக்கு முன்பு 2% க்கும் குறைவாக இருந்த கலப்பு அளவு, 2022 ஆம் ஆண்டில் 10% (E10) ஐ எட்டியது. மேலும், 2025 ஆம் ஆண்டில் 20% (E20) கலப்பு என்ற இலக்கை அடைந்தது. இதை 27% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications