Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராணிப்பேட்டையில் 27 சவரன் தங்க நகை போட்டும் அடங்காத மாப்ளை.. அரக்கோணத்தை அலறவிட்ட ஐடி கம்பெனி பெண்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வரதட்சணையை வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்றபோதிலும், தொடர்ந்து வரதட்சணை விவகாரம் வெடித்து கொண்டுதான் இருக்கிறது. வரதட்சணைக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக நம்முடைய நாட்டில் இருந்தபோதிலும் , வரட்சணைகள் தலைதூக்கி வருகின்றன.. அத்துடன் வாழ வேண்டும் என்ற பல கனவுகளுடன் காத்திருக்கும் இளம் பெண்களையும் காவு வாங்கிவிடுகின்றன.. இந்நிலையில் அரக்கோணத்தில் நடந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை தந்து வருகிறது. இது சம்பந்தமான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர் ரிதன்யாவே கடைசி வரதட்சணை மரணமாக இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைத்தாலும், அடுத்தடுத்த வரதட்சணை தற்கொலைகள் நடந்து வருகிறது.. இதற்கு வடமாநிலங்களும் விதிவிலக்கல்ல.

27 sovereign Gold Jewellery Ranipet Arakkonam 27

தம்பதி வரதட்சணை பிரச்சனை

கடந்த வாரம் உத்தரபிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. அங்குள்ள இளம் தம்பதிக்குள் வரதட்சணை பிரச்சனை வெடித்துள்ளது. ஒருகட்டத்தில் மாமியாரும், கணவரும் சேர்ந்து அப்பெண்ணை டாச்சர் தர துவங்கியிருக்கிறார்கள். 5 லட்சம் ரூபாய்க்கு பைக், பணம் வேண்டும் என்று கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர்..

இதில், எல்லைமீறி சென்ற மாமியார், சம்பவத்தன்று வீட்டின் இரண்டமாவது மாடியில் இருந்து, மருமகளை கீழே குதிக்கும்படி மிரட்டியிருக்கிறார். கணவரும் "குதி" என்று சொல்லி உள்ளார்.. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் அப்பெண், 2வது மாடியிலிருந்து கீழே குதித்துவிட்டார்.. மற்ற குடும்ப உறுப்பினர்கள் இதை வேடிக்கை பார்த்து நின்றுள்ளனர்.

எலும்பு முறிவு - பெண் சீரியஸ்

மாடியிலிருந்து கீழே குதித்த அப்பெண்ணுக்கு எலும்பு முறித்து, ரத்த காயங்களும் ஏற்பட்டுள்ளன.. அப்போதுகூட, ஈவுஇரக்கமின்றி அவரது கணவர், மனைவியை தாக்கியிருக்கிறார்.. இதைப்பார்த்து இவர்களது குழந்தைகள் அலறி துடித்தன..

இந்த கொடூர சம்பவத்தை பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டார்.. இதற்கு பிறகே பெண்ணின் குடும்பத்தினருக்கு விஷயம் தெரிந்து, போலீசில் புகார் தந்தார்கள்.

அந்த பெண் மருத்துவமனையில் தற்போது சீரியஸாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், வரதட்சணைக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைகளை எழுப்பி வருகிறார்கள்.

ராணிப்பேட்டை அரக்கோணம்

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஒரு துயரம் நடந்துள்ளது.. தண்டலம் பாலாஜி பகுதியை சேர்ந்த 30 வயது வினோத் என்பவர், ஐடி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கு 4 வருடத்துக்கு முன்பே திருமணமாகிவிட்டது. இவரது மனைவி 26 வயது நிவேதாவும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.. இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ரியா என்ற பெண் குழந்தை உள்ளது.

நிவேதாவுக்கு பெற்றோர் இல்லை.. எனினும், திருமணத்திற்கு, நிவேதா வீட்டிலிருந்து 27 சவரன் நகை, சீர்வரிசையை வரதட்சணையாக தந்திருக்கிறார்கள்.

இதனிடையே தம்பதிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக தகராறுகள் வெடித்திருக்கின்றன.. இதனால் மனவேதனைக்கு ஆளான நிவேதா, ஆதரவு தேடி சென்னை வில்லிவாக்கத்திலுள்ள தன்னுடைய பெரியப்பா வீட்டுக்கு சென்றார்.. எனினும், இரு வீட்டு பெரியவர்களும் இதில் தலையிட்டு, தம்பதியை சமாதானம் செய்து மீண்டும் குடும்பம் நடத்த செய்தனர்.

தம்பதிக்குள் தகராறு

ஆனாலும், தம்பதிக்குள் தகராறுகள் வந்தவண்ணம் இருந்தன.. அதாவது நிவேதா அதிக செலவு செய்கிறாராம், எதற்கெடுத்தாலும் பிடிவாதமாக இருக்கிறாராம்.. இதுதான் வினோத்துக்கு பிரச்சனையாக இருந்துள்ளது.

சம்பவத்தன்று குழந்தைக்கு உடம்பு சரியில்லாததால், வினோத்தின் பெற்றோர்கள் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது வினோத் WORK FROM HOME அடிப்டையில் வீட்டின் ஒரு ரூமில் அமர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தார்.. அப்போது நிவேதாவும் வீட்டின் இன்னொரு ரூமில் இருந்துள்ளார்.

அப்போது மீண்டும் நிவேதாவுக்கும், கணவருக்கும் சண்டை வெடித்துள்ளது. வாய்த்தகராறு முற்றிய நிலையில், ஒருகட்டத்தில் உச்சக்கட்ட விரக்தி அடைந்த நிவேதா, அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார்.. நீண்ட நேரம்கழித்து, மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்த குடும்பத்தினர், அறைக்கதவை தட்டியும் நிவேதா திறக்கவில்லை.

17 சவரன் நகை போட்டும் டார்ச்சர்

இதனால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, நிவேதா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.. உடனடியாக இது குறித்து போலீசுக்கு தகவல்தந்தனர். விரைந்து வந்த போலீசார் நிவேதாவின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், நிவேதாவின் மரணம் அவரது குடும்பத்தினரை உலுக்கி எடுத்து விட்டது.. தாய், தகப்பன் இல்லாத பெண்ணிடம், வரதட்சனை கேட்டு மாமியார் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாகவும், அவருடைய மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் நிவேதாவின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.. அத்துடன், சடலத்தையும் வாங்க மறுத்து சாலையில் போராட்டம் நடத்தினார்கள்..

இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தனர். தற்போது இதுகுறித்த வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணையையும் நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+