27 பவுன் நகை கொள்ளை.. நகைகளை வீட்டு ஓனரின் ஹேண்ட் பேக்கில் எடுத்து சென்ற மர்ம நபர்கள்
சென்னை: சென்னை திருவிக நகரில் 27 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை திரு.வி.க நகர் ஜார்ஜ் காலனி பாதம் தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன். வழக்கறிஞர் ஒருவரிடம் குமாஸ்தாவாக பணியாற்றி வருகிறார். கடந்த 2 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்றுள்ளனர்.

இன்று வீடு திரும்பியபோது வீட்டின் உள்ளே பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. மேலும் இரண்டு அறைகளில் உள்ள பீரோ லாக்கர் உடைத்து அதில் இருந்த 27 சவரன் நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணம், 1/2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
மேலும் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ள மர்மநபர்கள் சாமி பூஜை அறையில் படத்தில் இருந்த வெள்ளி பொருட்களையும் திருடி சென்றுள்ளனர். இவை அனைத்தையும் சீனிவாசனின் மனைவி அலுவலகத்திற்கு பயன்படுத்தும் பேக்கில் எடுத்து சென்றுள்ளனர்.
இது குறித்து திரு.வி.க. நகர் காவல் நிலையத்திற்கு சீனிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications