Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இன்று முன்னா, சோட்டு அறிமுகம்" ரேஷன் கடைகளில் 2 கிலோ, 5 கிலோ சிலிண்டர்கள் விற்பனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இரண்டு கிலோ மற்றும் ஐந்து கிலோ கேஸ் சிலிண்டர்கள் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி இன்று அறிமுகப்படுத்தி உள்ளார். 2 கிலோ சிலிண்டருக்கு முன்னா எனவும், ஐந்து கிலோ சிலிண்டருக்கு சோட்டு எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

வெளி மாநில தொழிலாளர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் வேலை காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிப்பவர்களின் வசதிக்காக 2 கிலோ, 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன.

இந்த சமையல் கேஸ் சிலிண்டர்கள் ரேஷன் கடைகளிலும் விரைவில் விற்பனைக்கு வரும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அண்மையில் தெரிவித்திருந்தார்.

 முன்னா, சோட்டு

முன்னா, சோட்டு

2 கிலோ கேஸ் சிலிண்டருக்கு முன்னா எனவும், ஐந்து கிலோ கேஸ் சிலிண்டருக்கு சோட்டு எனவும் பெயரிடப்பட்டுள்ள நிலையில், இதன் விற்பனை இன்று தொடங்கப்பட உள்ளது. சென்னை திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பல்பொருள் அங்காடியில் இந்த விற்பனை தொடங்கப்பட உள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுதும் முக்கிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

ஏற்கனவே வீட்டு உபயோக பயன்பாட்டுக்காக 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகையிலான சிலிண்டர் இணைப்பு பெற வேண்டுமானால், அதற்கு இருப்பிட சான்று அவசியம் என்ற விதி உள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள்

இதனால் கல்வி, வேலை மற்றும் தொழில் நிமித்தமாக சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்போரில் பலருக்கு முறையான முகவரி சான்று பெறுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் அவர்களின் நலனை கருத்தில் கொண்டே குறைந்த எடையிலான சிலிண்டர்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

விலை என்ன?

விலை என்ன?

சென்னையில் முதல்முறையாக 2 கிலோ சமையல் காஸ் சிலிண்டரை பெற ரூ.958, 5 கிலோ சிலிண்டர் பெற ரூ.1,515 நுகர்வோர் செலுத்த வேண்டும். அதன் பிறகு சிலிண்டர் தீர்ந்துவிட்டால், அதற்கான தொகையை மட்டும் கொடுத்து சிலிண்டரை நிரப்பிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்த மாதம் 2 கிலோ சமையல் எரிவாயு ரூ.250, 5 கிலோ ரூ.575.50 விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப, இந்த விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+