சென்னையில் பள்ளி வளாகத்திற்குள்ளேயே பலியான 2ம் வகுப்பு மாணவன் - டிரைவர், ஊழியர் கைது
சென்னை வளசரவாக்கத்தில் பள்ளி வாகனம் மோதி 2ஆம் வகுப்பு மாணவன் பள்ளி வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் பள்ளி வாகனம் மோதி 2ஆம் வகுப்பு மாணவன் பள்ளி வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விபத்து குறித்து பள்ளி வாகன ஓட்டுநர் பூங்காவனத்தையும் இறக்கிவிடும் பெண் ஊழியரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Recommended Video
வேன் மோதி உயிரிழந்த சிறுவனின் பெயர் தீக்சித் என்பதாகும். சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரது மகனாவார். 7 வயதான இந்த சிறுவன், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர், பள்ளி வளாகத்தில் பேருந்தில் இருந்து இறங்கி நடந்துச்சென்றார். அனைத்து மாணவர்களும் சென்று விட்ட நிலையில் தீக்சித் மீண்டும் வேனை நோக்கி வந்ததாக தெரிகிறது. அப்போது பின்புறமாக இயக்கப்பட்ட பள்ளிப் பேருந்து மோதி கீழே விழுந்தார்.

மாணவன் உயிரிழப்பு
சிறுவன் தீக்சித் விழுந்ததை கவனிக்காத டிரைவர் பேருந்தை இயக்கவே சக்கரத்தில் சிக்கினார் மாணவன். படுகாயமடைந்த மாணவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவர் தீக்சித் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

பெற்றோர்கள் குற்றச்சாட்டு
இதையடுத்து அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தாமதமாகவே தகவல் கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தொடர் பதற்றம் நீடிப்பதால் பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அறிந்து பள்ளி வளாகத்தில் குவிந்த பெற்றோர் தங்களது பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.

டிரைவர் கைது
சம்பவம் தொடர்பாக பள்ளி பேருந்து ஓட்டுநரை கைது செய்த வளசரவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து தனியார் பள்ளி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மெட்ரிக்குலேசன் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. வேன் டிரைவரின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து நடந்ததாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

போலீஸ் விசாரணை
இதனிடையே பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சிசிடிவி காட்சியை கைப்பற்றினர். அதில் வேனை ரிவர்ஸ் எடுத்த போது சிறுவன் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இது குறித்து பள்ளி தாளாளர், முதல்வர், வேனில் இருந்து இறக்கிவிடும் ஊழியர் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பெண் ஊழியர் ஞானசக்தியை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications