2024ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட செலிப்பிரிட்டி யார்? பவன் கல்யாண் இருக்காரே! முதலிடத்தில் சர்ப்ரைஸ்
சென்னை: 2024ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகை, நடிகைகள் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. இதில் டாப் 8 ல் இந்தியாவை சேர்ந்த 3 நடிகர், நடிகைகள் இடம் பிடித்துள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த யாரும் இந்த டாப் 8 பட்டியலில் இல்லை.
இன்னும் சில நாட்களில் நாம் ஆங்கில புத்தாண்டை கொண்டாட உள்ளோம். புத்தாண்டு பிறக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர், நடிகைகள் பற்றிய விபரம் என்பது வெளியாகும்.

அந்த வகையில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர், நடிகைகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் டாப் 8 இடங்களில் 3 இந்தியர்கள் உள்ளனர். குறிப்பாக நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் இந்த லிஸ்ட்டில் 2ம் இடம் பிடித்துள்ளார். இதுதொடர்பான விபரம் வருமாறு:
முதலிடத்தில் யார்?
2024ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரையுலக பிரபலங்களை பொறுத்தவரை முதலிடத்தில் காட் வில்லியம்ஸ் என்பவர் உள்ளார். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர். இவர் ஸ்டாண்ட் அப் காமெடியில் சிறந்து விளங்கி வரும் நிலையில் அவரை பலரும் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர். இவருக்கு பல நாடுகளில் ரசிகர்கள் உள்ளதால் காட் வில்லியம்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.
2வது இடத்தில் பவன் கல்யாண்
இந்த பட்டியலில் 2ம் இடத்தில் தெலுங்கு நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் இடம் உள்ளார். இந்த ஆண்டு உண்மையில் பவன் கல்யாணுக்கு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் அவரது கட்சி ஜனசேனா சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. எம்எல்ஏவாக வெற்றி பெற்ற பவன் கல்யாண் துணை முதல்வரானார். அதன்பிறகு திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலந்திருப்பதாக எழுந்த புகாரில் விரதம் இருந்து அவர் கோவிலுக்கு சென்றார். அதுதொடர்பாக அவர் கூறிய அதிரடி கருத்துகள் விவாதமானது. இதனால் பவன் கல்யாணை பலரும் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.
5ம் இடத்தில் சனா கான்
இந்த பட்டியலில் 3ம் இடத்தில் இருப்பவர் ஆடம் ப்ரோடி. இவர் அமெரிக்காவை சேர்ந்த நடிகர். இவர் The OC எனும் டிவி ஷோ மூலம் பிரபலமானார். Shazam, Ready or Not, My Father's Dragon உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். இந்த பட்டியலில் 4ம் இடத்தில் இங்கிலாந்தை சேர்ந்த நடிகை எல்லா பர்னெல் உள்ளார். 5ம் இடத்தில் இந்தி நடிகை சனா கான் உள்ளார். இவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக கூறியிருந்த நிலையில் அவர் அதிகம் தேடப்பட்டவர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
8 வது இடத்தில் நிம்ரத் கவுர்
அதேபோல் 6வது, 7 வது இடத்தில் முறையே அமெரிக்காவை சேர்ந்த நடிகர்களான கீரன் கல்கின், டெரன்ஸ் ஹோவர்ட் உள்ளனர். 8 வது இடத்தில் இந்தி நடிகை நிம்ரத் கவுர் உள்ளார். இவர் தனது சொந்த வாழ்க்கை பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டதால் மக்கள் மத்தியில் கவனம் பெற்றார்.












Click it and Unblock the Notifications