12ம் வகுப்பு தேர்வு அட்டவணை.. என்னென்ன ரூல்ஸ்.. காப்பி அடித்தால் தண்டனை என்ன? முழு விபரம் இதோ
மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இந்த பொதுத்தேர்வில் செய்ய வேண்டிய, செய்ய கூடாத விஷயங்கள் என்னென்ன என்ற லிஸ்ட் வெளியாகி உள்ளது.
12 -ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. ஏப்ரல் மாதம் 3 ஆம் நாள் வரை இந்த தேர்வுகள் அடுத்தடுத்து நடக்க உள்ளது. புதுச்சேரியிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இதே நாளில்தான் நடக்க உள்ளது.
தேர்வு தேதிகள் நல்ல இடைவெளியுடன் அமைக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் எந்த பிரச்சனையும் இன்றி தேர்வுக்கு படிக்க வசதியாக ஒவ்வொரு தேர்விற்கும் இடையில் இடைவெளி விடப்பட்டு உள்ளது.

தேர்வு தேதிகள்
இந்த தேர்வுகளுக்கான கால அட்டவணை பின்வருமாறு,
13.03.2023 மொழிப் பாடம்
15.03.2023 ஆங்கில தேர்வு
17.03.2023 தகவல்தொடர்பு ஆங்கிலம் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல் கணினி பயன்பாடுகள், உயிரியல் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல் , துறையியல் அறிவியல்
21.03.2023 இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்
27.03.2023 கணிதவியல், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைகள் & ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல் (பொது)
31.03.2023 உயிரியல், தாவரவியல், வரலாற்று வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்
03.04.2023 வேதியியல், கணக்கியல், புவியியல்
செய்ய வேண்டிய , செய்ய கூடாது விஷயங்கள்

இந்த பொதுத் தேர்வில் மாணவர்கள் செய்ய கூடாத விஷயங்கள்
செல்போன் எடுத்து வர கூடாது
காப்பி அடிக்க கூடாது
மினி ஜெராக்ஸ் எடுத்து வர கூடாது
கலர் சட்டை அணிந்து வர கூடாது (தனி மாணவர்களுக்கு பொருந்தாது)
விடைத்தாள்களை மாற்றிக்கொள்ள கூடாது
மின்னனு சாதனங்களை கொண்டு வரக்கூடாது
தாமதமாக வரக்கூடாது

ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள்
ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
ஆசிரியர்கள் போன் எடுத்து வரக்கூடாது
தேர்வு நேரத்தில் தேர்வு அறையைவிட்டு வெளியேற கூடாது.
தேர்வு அறைக்கு தாமதமாக வரக்கூடாது.
தேர்வு நேரத்திற்கு முன்பாக வினாத்தாள் கொடுப்பதோ, தேர்வு முடியும் முன் விடைத்தாள்களை வாங்கவோ கூடாது.

தண்டனை என்ன?
மாணவர்கள் இந்த தேர்வில் காப்பி அடிக்கும் பட்சத்தில் அவர்கள் 1-2 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது. அந்த வருடம் அவர்கள் எழுதிய தேர்வுகள் எல்லாம் ரத்து செய்யப்படும். மொத்தமாக அவர்களின் தேர்வுகள் நீக்கப்பட்டு தடை விதிக்கப்படும். மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுப்பதற்காக 3000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தமிழ்நாடு முழுக்க தீவிர கண்காணிப்பு பணிகளை செய்வார்கள். வினாத்தாள் லீக் ஆகாமல் இருக்க கடுமையான பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 281 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கு கடுமையான பாதுகாப்புகள் போடப்பட்டு உள்ளன. மாணவர்கள் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேச முடியும். பள்ளிகளில் இருந்தும், தனித்தேர்வர்களாகவும் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ - மாணவிகள் இந்த பொதுத்தேர்வை எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications