தமிழகத்தில் 7 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. பண்டிகைகள் நெருங்குவதால் மக்களே உஷார்!
சென்னை: தமிழகத்தில் மேலும் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 7,00,193 கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பேராகும்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவல்கள் எப்போதும் மாலை நேரங்களில் சுகாதாரத் துறையினால் வெளியிடப்படும். இந்த நிலையில் இன்றைய தினம் கொரோனா குறித்த தகவல்கள் வெளியானது.
அதில் தமிழகத்தில் மேலும் 3,077 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 7,00,193 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று ஒரே நாளில் பிசிஆர் மூலம் 81,259 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

சேம்பிள்கள்
இதுவரை 92,75,108 லட்சம் சேம்பிள்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய கொரோனா புள்ளி விவரங்களில் 1,829 ஆண்களும், 1,248 பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் 197 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கொரோனாவால் உயிரிழப்பு
இன்று ஒரே நாளில் 4,314 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 6,55,170 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள். இன்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 பேராகும். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,825 பேராகும்.

4 ஆயிரத்தை
இன்று ஒரே நாளில் 79,821 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 90,19,152 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 34,198 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் இன்று 5-ஆவது நாளாக 4 ஆயிரத்தை விட கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள்
இதுவரை 12 வயதுக்குட்பட்டவர்களில் சிறுவர்கள் 13,173 பேருக்கும் சிறுமிகள் 11,905 பேருக்கும் என மொத்தம் 25078 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அது போல் 13 வயது முதல் 60 வயது வரை 3,55,461 ஆண்களுக்கும் 233528 பெண்களுக்கும் என மொத்தம் 589021 பேருக்கும் அது போல் 60 வயதை கடந்தவர்களில் 54077 ஆண்களுக்கும் 32017 பெண்களுக்கும் என மொத்தம் 86071 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications