தமிழகத்தில் இன்று 3,290 பேருக்கு கொரோனா.. சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மிகப்பெரிய ஸ்பைக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3290 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,92,780 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில தற்போது பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்புடன் 18,606 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். இந்த எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 ஆயிரம் என்கிற அளவிற்கு உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    #Covid-19 update தமிழகம்: 3 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை!

    சென்னையில் இன்று ஒரே நாளில் 1188 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7161 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில் தான் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருவதால், தேர்தல் முடிந்த பின் கடும் கட்டுப்பாடுகளை அரசு விதிக்குமோ என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது. சென்னையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியில் கூறியுள்ளார்.

    இன்றைய பாதிப்பு

    இன்றைய பாதிப்பு

    ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் பெறும் கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இன்று ஒரே நாளில் 3,290 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,92,780 ஆக உயர்ந்துள்ளது.

    சிகிச்சை எத்தனை பேர்

    சிகிச்சை எத்தனை பேர்

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,715
    பேர் இன்று மீண்டனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8,61,424 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 11,318 ஆக உயர்ந்துள்ளது.

    அதிக மரணம்

    அதிக மரணம்

    தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 12 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 12,750 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஒரே நாளில் 7 பேர் பலியாகி உள்ளனர். காஞ்சிபுரம் ,கன்னியாகுமரி, தென்காசி, திருவண்ணாமலை, திருச்சியில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர்.

    80000 சோதனைகள்

    80000 சோதனைகள்

    கொரோனா பாதிப்பு மிகவேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக சோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 85,494 பேருக்கு RT-PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் RT-PCR பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,94,42,502 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் 86,066 பரிசோதனைகள் இன்று மட்டும் நடத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை தமிழகத்தில் 1,97,67,310 RT-PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் அதிகம்

    சென்னையில் அதிகம்

    தமிழத்திலேயே சென்னையில் தான் மிக அதிகமாக பரவி வருகிறது.. சென்னையில் இன்று ஒரே நாளில் 1188 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 280 பேருக்கும், கோவையில் 277 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 183 பேருக்கும், திருச்சியில் 122 பேருக்கும், தஞ்சாவூரில் 120 பேருக்கும் கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்கு எவ்வளவு பேர்

    எங்கு எவ்வளவு பேர்

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஓரே நாளில் 10,487 இல் இருந்து 11,318 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், திருச்சி போன்ற மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அதிகபட்சமாக சென்னையில் 7161 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1948 பேரும், கோவையில் 1863 பேரும், திருவள்ளூரில் 748 பேரும், தஞ்சாவூரில் 639 பேரும், காஞ்சிபுரத்தில் 513 பேரும், மதுரையில் 390 பேரும், திருப்பூரில் 438 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+