ஆஹா சூப்பர் நியூஸ்.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் ஆகி வீடு செல்வோரே அதிகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மேலும் 3,914 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. அது போல் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவல்கள் எப்போதும் மாலை நேரங்களில் சுகாதாரத் துறையினால் வெளியிடப்படும். இந்த நிலையில் இன்றைய தினம் கொரோனா குறித்த தகவல்கள் வெளியானது.

அதில் தமிழகத்தில் மேலும் 3,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 6,87,400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று ஒரே நாளில் பிசிஆர் மூலம் 90,286 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

192 கூடங்கள்

192 கூடங்கள்

இதுவரை 89 லட்சம் சேம்பிள்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய கொரோனா புள்ளி விவரங்களில் 2,319 ஆண்களும், 1,595 பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் 192 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கொரோனா பலி

கொரோனா பலி

இன்று ஒரே நாளில் 4,929 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 6,37,637 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள். இன்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 பேராகும். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,642 பேராகும்.

39,121 பேர் தனிமை

39,121 பேர் தனிமை

இன்று ஒரே நாளில் 88,643 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 86,96,455 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 39,121 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்தை விட கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்கள், பெண்கள்

ஆண்கள், பெண்கள்

இதுவரை 12 வயதுக்குட்பட்டவர்களில் சிறுவர்கள் 13,169 பேருக்கும் சிறுமிகள் 11,898 பேருக்கும் என மொத்தம் 25067 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அது போல் 13 வயது முதல் 60 வயது வரை 3,47,935 ஆண்களுக்கும் 2,28,366 பெண்களுக்கும் என மொத்தம் 5,76,333 பேருக்கும் அது போல் 60 வயதை கடந்தவர்களில் 54017 ஆண்களுக்கும் 31983 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+