தமிழகத்தில் ஒரே நாளில் 3,943 பேருக்கு தொற்று.. சென்னை, மதுரையில் கிடுகிடு உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 2,393 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,327 ஆக உயர்ந்துள்ளது.

3,943 covid 19 positive cases in tamil nadu today

இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 2,325 ஆக உயர்ந்துள்ளது. இது வரை தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 50,074 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனாவால் 60 பேர் பலியாகி உள்ளனர். இது வரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,201ஆக உயர்ந்து உள்ளது.

மதுரையில் இன்று ஒரே நாளில் 261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 139, திருவள்ளூரில் 157, கள்ளக்குறிச்சியில் 87 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 103, தேனியில் 75 , திருநெல்வேலியில் 51 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கடலூரில் 68 பேருக்கு, திண்டுக்கல்லில் 36 பேருக்கு, வேலூரில் 73 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மிக அதிகபட்சமாக 30053 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 30242 சாம்பிள்கள் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக இன்று வரை 11,70,683 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 11,16,622 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+