திமுகவின் ஆபரே“சன்”.. செந்தில்குமார் எம்பி கொடுத்த “க்ளூ”! உதிரும் இலைகள்.. அதிரும் வேர்கள்
சென்னை: அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மூன்று பேர் திமுகவுக்கு தாவுவதாக அக்கட்சியின் தருமபுரி தொகுதி எம்.பி குறியீடாக ட்விட்டரில் தெரிவித்த நிலையில், அவர்கள் மூன்று பேருமே கொங்கு மண்டலத்தை சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் இணைய இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
தருமபுரி தொகுதி திமுக எம்.பி செந்தில்குமார் ட்விட்டரில் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர். தன்னுடைய செயல்பாடுகள், கோரிக்கைகள் மீதான நடவடிக்கைகள், அரசியல் கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.
அதேபோல், பாஜக, அதிமுக, நாம் தமிழர் போன்ற எதிர்க்கட்சிகள் மீது பகிரங்கமாக ட்விட்டரில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் தருமபுரி செந்தில்குமார். இவரது ட்விட்டர் பதிவுகள் அரசியலில் விவாதப் பொருளாகவும் மாறி வருகின்றன.

பாஜக எம்.எல்.ஏக்கள்
இந்த நிலையில் கடந்த மே மாதம் திமுக எம்பி திருச்சி சிவா மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார், திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக. உங்களுக்கு ஒரு தகவல். உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் துக்கிவிடுவோம்." என்று பதிவிட்டார்.

அதிமுக எம்.எல்.ஏக்கள்
அந்த சமயத்தில் செந்தில்குமாரின் இப்பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார் செந்தில்குமார். அதில், மூன்று இரட்டை இலைகளின் எமோஜி அடுத்து ஒரு அம்பு குறி எமோஜி அடுத்து ஒரு உதயசூரியம் எமோஜியை பதிவிட்டு இருக்கிறார். அதிமுகவை சேர்ந்த 3 பேர் திமுகவுக்கு வரப்போவதாக குறிக்கும் வகையில் அந்த அந்த பதிவு இருந்தது.

மேற்கு மண்டல எம்.எல்.ஏக்கள்
இந்த நிலையில் தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் திமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதையே செந்தில்குமார் சூசகமாக தெரிவித்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மூவரும் திமுகவில் இணையவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

திமுகவில் ஆறுகுட்டி
கடந்த சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுகவின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி திமுகவில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியபோது, அவரது அணியில் இருந்த ஆறுகுட்டி, பின்னர் எடப்பாடி பழனிசாமியின் அணிக்கு தாவினார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த ஆறுகுட்டி, எடப்பாடி அணியில் தொடர்ந்து இருந்து வந்த நிலையில் கட்சி தாவியது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே?












Click it and Unblock the Notifications