அதிமுகவில் மேலும் 3 விக்கெட்டுகள் பறிபோகின்றனவா? இபிஎஸ் தலையில் இடி! ஆனந்தை சந்தித்த எம்எல்ஏக்கள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வேளாண் பட்ஜெட் முடிந்ததும் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆனந்தின் அறையில் 3 அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் தனியே ஆலோசனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026- 2027 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் முடிந்ததும் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் புஸ்ஸி ஆனந்தின் அறைக்கு 3 அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் சென்றனர்.

edappadi palanisamy admk

அதாவது எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம் ஆகிய மூவரும் ஆனந்தின் அறையில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபையில் கூட இந்த மூவரும் மற்ற அதிமுக எம்எல்ஏக்களுடன் அதிகளவில் பேசவில்லை. இவர்கள் மூவரும் ஆனந்துடன் என்ன பேசினார்கள் என தெரியவில்லை. ஆனால் தவெகவுக்கு தாவுவது குறித்தும் அவர்களுக்கான பதவி குறித்தும் பேசியிருக்கலாம் என தெரிகிறது.

ஏற்கெனவே மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, சி.விஜயவாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 6 அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் போது அவர்கள் 6 பேருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. அது போல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கும் வேலுமணி, அன்பழகன், சண்முகம் ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிடுவார்கள் என சொல்லப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 47 இடங்களில் அதிமுக வென்றது. அதில் 6 எம்எல்ஏக்கள் கட்சி தாவி விட்டதால் அதிமுக எம்எல்ஏக்களின் பலம் 41 ஆக குறைந்தது. தற்போது வேலுமணி உள்ளிட்ட 3 பேர் ராஜினாமா செய்தால் சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்களின் பலம் 38 ஆக குறையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+