தகதகன்னு.. தங்கம் மாதிரி.. நச்சுன்னு 3 அறிவிப்பு.. ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு 4 முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. மிக முக்கியமான சில வாய்ப்புகளை இந்த அறிவிப்புகள் வழங்கி உள்ளன. இருந்த இடத்தில் இருந்தே பல்வேறு மாற்றங்களை செய்யும் சூப்பர் வாய்ப்பை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்புகள் என்னென்ன என்று இங்கே வரிசையாக பார்க்கலாம்.
அறிவிப்பு 1: ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது. சோதனை அடிப்படையில் 234 தொகுதிகளில் தலா ஒரு ரேஷன் கடையை தேர்வு செய்து தொடங்க திட்டம் போடப்பட்டு உள்ளது. சுத்தத்தை உறுதி செய்யும் வகையிலும், கடைகளில் அரிசி அளவு குறைவதை தடுக்கும் வகையிலும் இனி பாக்கெட்டில் விற்கும் முறை அமலுக்கு வருகிறது.

முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
அறிவிப்பு 2: தமிழ்நாடு முழுக்க புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்க உள்ளது. புதிய ரேஷன் கார்டுகள் அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக புதிய கார்டுகள் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. புதிதாக ரேஷன் கார்டுகள் கேட்டு 2.8 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்த பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது. இதன்படி புதிதாக 2.8 லட்சம் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை 2.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. இன்று முதல் தினமும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்.
அறிவிப்பு 3: ரேஷன் கார்டில் விலாசம் மாற்றுவதற்கான அசத்தலான வசதிகளை மாநில அரசு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது. இது தொடர்பான முக்கியமான விபரங்களை ஆன்லைன் வழியாக வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகளில் செய்ய வேண்டிய மாற்றங்களை ஆன்லைன் வழியாக எளிமையாக செய்ய முடியும். முக்கியமாக விலாசம் மாற்றுவதை ஆன்லைன் வழியாக செய்ய முடியும்.
பின்வரும் முறைகளை பயன்படுத்தி ஆன்லைன் வழியாக விலாசம் மாற்ற முடியும். தமிழ்நாடு மின்-பொது விநியோக அமைப்பு போர்ட்டலை இதற்கு பார்வையிட வேண்டும்.
https://www.tnpds.gov.in/home.xhtml
வலது புறத்தில் நான் அடுத்து "ஸ்மார்ட் கார்டு சேவைகள்" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
பின்னர் நான் முகவரியை மாற்றுவதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
எனது புதிய முகவரி தொடர்பான அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும்- பின் குறியீடு, மாநிலம், பகுதி பெயர் மற்றும் பல என்பதை தெரு செய்ய வேண்டும்.
ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இல்லையெனில் TNEPDS உதவி மையத்தை தொடர்பு கொள்ளவும்.
1967, 1800-425-5901 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications