சென்னையில் இன்று 5 மணிநேரம் மின்தடை.. அம்பத்தூர் உள்பட 3 பகுதிகளில் பாதிப்பு! மின்வாரியம் அறிவிப்பு
சென்னை: சென்னையில் மின்வாரியம் சார்பில் இன்று பராமரிப்பு நடைபெற உள்ளது. இதனால் அம்பத்தூர் உள்பட 3 முக்கிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மொத்தம் 5 மணிநேரம் மின்சாரம் தடைப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 03.09. 2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும். சென்னையில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விபரம் வருமாறு:
அம்பத்தூர்: ஐசிஎப் காலனி, செல்லியம்மன் நகர், கங்கை சாலை, காவேரி தெரு, அயப்பாக்கம், டிஎன்எச்பி பேஸ் 1 முதல் 3 வரை, டிஎன்எச்பி 2394 குடியிருப்புகள், அயப்பாக்கம் முதல் திருவேற்காடு பிரதான சாலை, அம்பத்தூர் முதல் அத்திப்பட்டு வானகரம் சாலை, அத்திப்பட்டு பகுதி, ரோஜா தெரு, குப்பம், கேஎஸ்ஆர் நகர், விஜிஎன் சாந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் இன்று ‛பவர்கட்' ஏற்பட உள்ளது.
அதேபோல் மேல் அயப்பாக்கம், செட்டி தெரு, விஜயா நகர், பஞ்சாயத்து நகர், சென்னை நியூ சிட்டி, ஈடன் அவென்யூ, கோன் ராஜ்குப்பம், அக்ரஹாரம், தேவி நகர், சின்ன கோலடி, ஜோதி நகர், மூன்று நகர், எழில் நகர் மற்றும் அண்ணனூர் உள்ளிட்ட இடங்களில் இன்று மின்சாரம் தடைப்பட உள்ளது.
போரூர்: போரூர், மதானந்தபுரம், கெருகம்பாக்கம், ராமாபுரம், சின்ன போரூர், குன்றத்தூர் சாலையின் ஒரு பகுதி, காரம்பாக்கம் பகுதி, மவுண்ட் பூந்தமல்லி சாலையின் ஒரு பகுதி, முகலிவாக்கம் பகுதி, மவுலிவாக்கம் பகுதி, கொளப்பாக்கம் பகுதி உள்ளிட்ட இடங்களிலும் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
ஆர்ஏ புரம்: ஆர்ஏ புரம் 1 முதல் 7 வயது மெயின் ரோடு, ஆர்ஏ புரம் 1 முதல் 4வது குறுக்கு தெரு, கிரீன்வேஸ் சாலை, பிஷப் கார்டன், பிஷப் கார்டன் விரிவு, பாக்யரதி தெரு, விஸ்வநாதன் தெரு காமராஜ் சாலை, கெமியர்ஸ் சாலை, கோ ஆப்ரேடிவ் காலனி, ஸ்ரீராம் நகர் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு, போட் கிளப் சாலை, சத்திய நாராயணா அவென்யூ, கிரெசென்ட் அவென்யூ, ஏபிஎம் அவென்யூ உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட இருக்கிறது.
மேலும் செயின்ட் மேரிஸ் சாலை, படவேட்டம்மன் தெரு, டர்ன் புல்ஸ் சாலை, பிரித்வி அவென்யூ, திருவேங்கடம் தெரு, ஆசின் நகர், கணபதி காலனி, கெமியர்ஸ் 1வது லேன், அடையாறு கிளப் கேட் சாலை, பக்ஸ் சாலை, ஆர்கே புரம், ஷூண்முகபுரம், வெங்கட் ராமன் தெரு, கேசவபெருமாள்புரம் (வடக்கு, மத்தி, கிக்க), அன்னை சத்யா நகர் 1 முதல் 5வது தெரு, அன்னை தெரசா நகர், கோவிந்த சாமி நகர், கட்டபொம்மன் தெரு, இளங்கோ தெரு, சிருங்கேரி மடசாலை மற்றுமு் வன்னியம்பதி தெரு உள்ளிட்ட இடங்களிலும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.












Click it and Unblock the Notifications