சென்னை சுங்கச்சாவடி அருகே 3 பேருக்கு உடம்பெல்லாம் மூளை.. உருவத்தை பார்த்தாவது யோசித்திருக்கலாம்
சென்னை: சென்னை செனாய் நகரைச் சேர்ந்த தினகரன் என்பவர் சாலை பணி அமைக்கும் இன்ஜினியராக உள்ளார். கடந்த மாதம் சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே சாலை அமைக்கும் பணி நடந்தது. அப்போது சாலை அமைக்க பயன்படுத்தப்பட்ட ரோடு ரோலர். செங்குன்றம் அருகே நல்லூர் சுங்கச்சாவடி பகுதியில் பழுதானது.. அந்த ரோடு ரோலரை லாரியில் ஏற்றி திருடிச்சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதை எல்லாமா திருடுவார்கள் என்பது போல் சம்பவம் சென்னை செங்குன்றம் பகுதியில் நடந்துள்ளது. சென்னை செங்குன்றம் அடுத்த மீஞ்சூர் பகுதியில் தான் துறைமுகம் அமைந்துள்ளது. சென்னையின் அத்தனை கனரக வாகனங்களும் அங்கு தான் கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு வந்து செல்கின்றன.

தமிழ்நாட்டின் மிக முக்கியமான துறைமுகமாக காட்டுப்பள்ளி துறைமுகம் இருக்கிறது.. சென்னைக்குள் வாகனங்கள் வராமல் இருப்பதற்காக முதலில் தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் வழியாக சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் தான் வாகனங்கள் அம்பத்தூர் எஸ்டேட் வழியாக கடந்து புழல் வழியாக துறைமுகத்தை அடைந்து வந்தன.
அடுத்ததாக வண்டலூரில் இருந்து அவுட்டர் ரிங் ரோடு அமைக்கப்பட்டது. இந்த சாலை சென்னையில் இருந்து முற்றிலும் தள்ளி பூந்தமல்லி, பட்டாபிராம் வழியாக நேரடியாக நல்லூர் வழியாக துறைமுகம் செல்லும் வகையில் உள்ளன. துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகப்படியான வாகனங்கள் வந்து செல்வது வழக்கம்.இதன் காரணமாக சாலைகளும் அடிக்கடி பழுதாகி வருகின்றன. இதன் காரணமாக மீஞ்சூர் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடப்பது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் சென்னை செனாய் நகரைச் சேர்ந்த 31 வயதாகும் தினகரன் சாலை பணி அமைக்கும் என்ஜினியராக வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் மீஞ்சூர் அருகே சாலை போடும் பணியை பணியாளர்களுடன் சென்று மேற்கொண்டுள்ளார். இதற்காக பயன்படுத்தப்பட்ட ரோடு ரோலர், செங்குன்றம் அருகே உள்ள நல்லூர் சுங்கச்சாவடி அருகே பழுதாகியது. இதனால் சாலையோரமாக ரோடு ரோலர் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாலையோரம் நிறுத்தி இருந்த ரோடு ரோலரை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருப்பதை கண்டு தினகரன் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தினகரன் அளித்த புகாரின் பேரில் சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்கள். விசாரணையில் திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அலெக்ஸ்(36), வெங்கடேசன்(34) மற்றும் கோபிநாத்(52) ஆகியோர் ரோடு ரோலரை லாரியில் ஏற்றி திருடிச்சென்று விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், திருடப்பட்ட ரோடு ரோலரை மீட்டார்கள்.












Click it and Unblock the Notifications